UNLEASH THE UNTOLD

நாகஜோதி

வேலையும் கூலியும்

சமையல் செய்பவர் என சொன்னவுடன் சட்டென அனைவரின் மனதுக்கும் வருவது ஒரு பெண் அடுப்படியில் சமையல் செய்யும் உருவம்தான். ஏதாவது வீடுகளில் ஆண்கள் சமையல் செய்கிறார்கள் எனச் சொன்னால், ஏதோ செய்யக்கூடாத வேலையை ஒரு…

மீசை

நம் சமூகத்தில் மூக்கின் கீழ் வளரும் ரோமத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால் அந்த மீசைக்கு அத்தனை மதிப்பளிப்பது அவசியமா என சிந்தித்தால், ‘இல்லை’ என்பதே பதிலாக வரும். காரணம் மீசை என்பது…

குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...

குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

தொட்டால் குற்றமா?

ஒரு குழந்தைக்கு நல்ல தொடுதல் (Good touch) கெட்ட தொடுதல் (Bad touch) சொல்லிக் கொடுக்க வேண்டும் எனப் பேசுகிறோம், குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அவர்களின் உடலைக் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறோம், அப்படியிருக்க அவர்களின் உடலைத் தொடுவதற்கு அவர்களின் அனுமதி வேண்டும் எனப் பேசுவதும் மிக முக்கியமானது என உணருவது மிகவும் அவசியம்.

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

பிலிஸ் வீட்லி

இவரது கவிதைகளில் இவர் வாழ்க்கையின் பல தாக்கங்கள் பிரதிபலித்தன. மேலும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் பெருமையும் இவர் படித்த இலக்கியங்களின் மேற்கோள்களும் பைபிள் குறிப்புகளும் கவிதைகளில் தெரிந்தன. இவர் கவிதைகளில் இருந்த தனித்துவமும் இலக்கியச் செழுமையும், வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற அதே வேளையில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இத்தனை நேர்த்தியாக பல கவிதைகள் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்கர்களால் இவரது கவிதைகள் ஒரு குப்பை எனவும், வேறு சில சிறந்த கவிஞர்களிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டது. அத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் வெகுஜன மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது ஃபிலிஸ்ஸின் கவிதைகள்.

மாபெரும் விஞ்ஞானி ரோசலிண்ட் ஃபிராங்க்ளின்

ரோசலிண்ட் எடுத்த எக்ஸ்ரே படத்தை வாட்சன், கிரிக்கிடம் ரோசாலிண்ட்டின் அனுமதியின்றி வில்கின்ஸ் காட்டினார். வாட்சன், கிரிக் ஏற்கெனவே டிஎன்ஏ அமைப்பைக் கண்டுபிடிக்கவும் அது குறித்த தகவல்களை அறியவும் செய்து வந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக்கியது ரோசாலிண்ட்டின் இந்தப் படம். இந்தப் படத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சிகள் செய்து, டிஎன்ஏ வடிவம் இப்படி இருக்கலாம் என ஒரு கோட்பாட்டை நிறுவினர் இருவரும்.