UNLEASH THE UNTOLD

தொழில்நுட்பம் அறிவோம்!

உங்கள் டிஜிட்டல் ஆரோக்கியத்தைக் கவனிக்கிறீர்களா?

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தம் திறன்களை வளர்ப்பதும் முன்னேறுவதும் மிகச் சிலர் மட்டுமே. பலர் வேலை நேரத்திலும் சமூக வலைத்தளங்கள், மெசேஜிங் செயலிகள் எனப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில் படைப்புத்திறன் குறைகிறது. வீட்டில் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகிறது. டிஜிட்டல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயலிகள், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் இன்பில்ட் வாய்ப்புகள் எனப் பல உள்ளன. தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய மற்றொரு தொழில்நுட்பம்தான் கைகொடுக்கிறது. இது ஒரு நகைமுரண்.

புத்தகங்களின் எதிர்காலம்

அமேசானில் வாங்காத புத்தகங்களையும் கிண்டிலில் படிக்க முடியும். வை.மு.கோதைநாயகி, ராஜம் கிருஷ்ணன், தொ.பரமசிவம் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பினருக்கும் இவர்களின் எழுத்து போய்ச் சேரவேண்டும் என்ற நல்ல நோக்கில் அரசு பணம் கொடுத்து நூல்களின் உரிமையை வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் இணையத்தில் பி.டி.எஃப், வேர்ட், இபப் எனப் பல வகையில் கிடைக்கின்றன. அச்சில் இல்லாத பழந்தமிழ் நூல்களும் ஸ்கேன் செய்யப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ புத்தகவடிவில் இணையத்தில் உலாவுகின்றன. உலக நாடுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிற மொழிப் புத்தகங்களும் இலவசமாகக் கிடைக்கின்றன.

கூகுள் மேப் பொய் சொல்லுமா?

கிண்டியில் இருந்து பாரீஸ் கார்னர் போகும் வழியில் பசிக்கிறது என்றால், ரெஸ்டாரண்ட் என்ற வார்த்தையைத் தொட்டால் போதும். நீங்கள் போகும் சாலையில் அல்லது சாலைக்கு மிக அருகில் இருக்கும் உணவகங்களைக் காட்டும். இவ்வளவு நிறைய உணவகங்களைக் காட்டுகிறதே எனக் குழம்பாமல் உங்களுக்கு ஏற்ற மாதிரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். உங்கள் துணைவரைவிடத் துல்லியமாக உங்களுக்கு என்ன பிடிக்கும் என செயலிக்குத் தெரியும்.

கவிதை எழுதும் கணினி மென்பொருள்

உங்கள் புத்தகத்திற்கு அட்டைப்படம் வடிவமைக்கக்கூட இதைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வகை ஓவியம் அல்லது குறிப்பிட்ட ஓவியரின் சாயலைப் போல படம் இருக்க வேண்டும் என்றுகூடத் தட்டச்சு செய்யலாம். மேலே உள்ள படம் படித்துக்கொண்டிருக்கும் கிராமப் பெண்ணின் ஆயில் பெயிண்டிங் ஓவியம். ஓவியர் இளையராஜாவின் சாயலில் இருக்க வேண்டும் என்ற வார்த்தை கட்டளையைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு புதிதாக உருவாக்கிய ஓவியங்கள்.

மாதவிடாய் செயலிகளின் சாதக, பாதகங்கள்

மாதவிடாய் செயலிகள் நம் உடல்நிலையையும் மனநிலையையும் நாம் புரிந்துகொள்ளும் முயற்சியில் உதவுகின்றன. எப்போது என்ன நடக்கும் என்பதன் பேட்டர்னைப் புரிந்துகொள்வதன் மூலம் ஓரளவிற்கு மாதவிடாய் கால சிரமங்களை எளிதாக்கலாம்.

உண்மையா எனக் கண்டறிய ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்!

கூகுள் எப்படி வார்த்தைகளைத் தேடுகிறதோ அப்படிப் படங்களையும் தேடித்தரும். ஒரு படம் இதற்கு முன் வேறெந்த வலைத்தளத்தில் பதிவாகி இருக்கிறது எனப் பின்னோக்கித் தேடித்தருவதால்தான் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச் எனப்படுகிறது. இப்படிப் படங்களைத் தேடுவதற்கு கூகுள் தளத்தில் மைக் ஐகான் அருகில் கேமரா போல இருக்கும் ஐகானை அழுத்த வேண்டும். https://images.google.com/ தளத்திற்கும் செல்லலாம்.

புலிக்குட்டி விற்பதற்கு அல்ல வாட்ஸ்அப் பிஸினஸ்!

உங்கள் தொழில் சம்பந்தமான பிஸினஸ் ப்ரபைலை உருவாக்க முடியும் என்பது முதல் வசதி. வாட்ஸ்அப் பிஸினஸ் ஆப்பை நிறுவிய பிறகு, வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டால் வரும் பிஸினஸ் டூல்ஸை அழுத்தினால் பிஸினஸ் ப்ரபைல் ஆப்ஷனைக் காண்பிக்கும். இதில் தொழில் பெயர், முகவரி, மேப், தொலைபேசி எண், வேலை நேரம் போன்ற அடிப்படை தகவல்களைப் பதிவு செய்துகொள்ளலாம். வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் எல்லா அடிப்படைத் தகவல்களும் எளிமையாகக் கிடைக்க இது ஒரு சிறந்த வழி.

கூகுளின் ஈஸ்டர் முட்டைகளும் சில தேடுதல் குறிப்புகளும்

குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்த செய்தியைத் தேடுவதென்றால் தேடுபொறிக்குக் கீழே டூல்ஸ் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். புதிதாக வந்த செய்திகள், பழைய செய்திகள் என நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்து, கால வரிசைப்படி எதை வேண்டுமானாலும் தேட முடியும்.