UNLEASH THE UNTOLD

ஜமீலா

வெள்ளைச் சேலை மெய்ம்பாத்து வாப்புமா

பத்திருபது நாள்கள் முன்பு எங்கள் வாப்பாவின் போனில் எங்கள் வாப்புமாவின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஓரத்தில் மெலிதான நீல நிற பார்டர் போட்ட வெள்ளை வாயில் சேலையில் இருந்தார் வாப்புமா. புகைப்படம் பிடிப்பதற்காக வேண்டிதான்…

மெதுவாய் மெதுவாய் வந்துற்றதே

நம் குழந்தைகளுக்கு அவரவர்க்கென ஒரு வாழ்வு அமையப் பெற்று அவ்வாழ்வில் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதைக் கண்ணாறக் காணவேண்டும் என்பதே குடும்பமாக வாழும் நம் ஒவ்வொருவரின் இயல்பான விருப்பமாகும். இப்படி நம் குழந்தைகளின் வாழ்வை பேரன் பேத்திகள்…

பாதைகள் உண்டு பயணிக்க

சென்ற டிசம்பர் மாதம் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் ஆற்றுப் பாலம் சேதமடைந்து போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருந்தது. பாலம் சீராகும்வரை அந்தக் கரையிலுள்ள ஊர்களுக்கு இங்கிருந்து சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதாவது சில நாட்களுக்கு…

வெள்ளித்திரையும் பொன் சமிக்கிச் சேலையும்

எப்போதுமே நம்முடைய சிறுபருவத்து நினைவுகள் நமக்கு இனிமையானவை. நமக்கென கடமைகளும் கவலைகளும் இல்லாது பெற்றோர் கவனிப்பில் முழுதும் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு துள்ளித் திரிந்த சிறுபருவத்து நினைவுகள் நம் மனதில் பசுமையாகத் தங்கிவிடுபவை. அதனால்தானோ என்னவோ…

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

பாவையர் திலகமதான பைங்கிளி ஃபாத்திமத்தைப் புகழ்ந்தே துதிப்போம்நற்றிரு மேனியர் நல்கதீஜா
புத்திரி ஃபாத்திமத்தைப் புகழ்வோம்.

என்றிவ்வாறும் வாழ்ந்தோம்

தொடக்கத்தில் இவ்வேறுபாடு பிரிவினையாக உருவெடுக்காமல், கொள்கை வேறுபாடு என்ற அளவிலேயே இருந்தது. எனினும் ஒரு கட்டத்தில் தமிழக முஸ்லிம்களிடையே சுன்னத் ஜமாஅத் , தவ்ஹீத் இயக்கம் என இரு பிரிவுகள் உருவாகிவிட்டன.

ஆடித் திரிதல் கண்டால் ஆவி தழுவுதடி

“ஆத்து மணலிலே சோறாக்கி அவரைக்காய்ப் பிஞ்சிலே கறிசமைச்சு
மின்வெட்டாம் பூச்சியில் விளக்கேத்தி
வேடிக்கை பாக்கலாம் சோடிப்பெண்ணே” என்ற எங்க வாப்புமாவின் சிரிப்பாணி வழியும் குரல்.



ஊரான ஊரில் பேரான பேர்கள்

ஆஷா பரி என்றொரு சாச்சி இருக்கிறார் ஊரில். ஆங்கில காட்பரி, பிளாக்பரி, ப்ளூபரி போல ஏரலில் எப்படி ஆஷாபரி என்று நினைக்க வேண்டாம். ஆயிஷா ஃபரீதாவைத்தான் ஆங்கிலேயராக்கி விட்டார்கள் ஏரலூரார்கள்.

ஓச்ச மாட்டுப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு

“இன்னா பாரு பொறவூரா பேத்தியே போறாளே”, என்று கீழத்தெருவிலிருந்து ஃபைரோஸ் லாத்தாவையும் சைபுன்னிஸாவையும் அவரவர் வீட்டினர் அனுப்பி வைக்க, அது அப்படியேத் தொடர்ந்து ஏரல் முஸ்லிம் பெண்களின் படிப்பு பெரிய பத்து எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி வரை என்று ஆனது.



பிள்ளை பெத்த வீடு

அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.