UNLEASH THE UNTOLD

சினிமாவுக்கு வாரீகளா?

அபூர்வ சகோதரர்கள்

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

வேலைக்காரி

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

நல்லதம்பி 1949

ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரலேகா

இறுதியில் ஆறு நிமிடங்கள் இடம் பெறும், முரசு நடனம் என்பதுதான் பிரம்மாண்டத்தின் உச்சம். இசை, நடன அமைப்பு, அரங்க அமைப்பு என எத்தனை தடவைப் பார்த்தாலும், புதிதாகவே பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. 400 நடனக் கலைஞர்களுள் ஒருவராக நடித்த (அறிமுகமான) எஸ்.என்.லட்சுமி அம்மா தன் இறுதிக்காலம் வரை ( 2012), 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர், இவர் மிகக் கூடுதலான காலம் நடிப்புத் துறையில் இருந்தவர் என்கிற பட்டியலில் உறுதியாக இடம் பெறுபவர்.

ஞானசவுந்தரி (1948)

ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.

லஷ்மி விஜயம்

மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. என் விருப்பத்தைச் சொல்லிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டு, பெண் உள்ளே போகிறார். பெண்ணின் அப்பா, “பெண்தான் மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டுவாள்; வீட்டு வேலைகள் அனைத்தையும் மாப்பிள்ளைதான் செய்ய வேண்டும்” என்கிறார்.

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

கல்வி என்னைக் கர்வியாக்கியது, மடமையால் மதி இழந்தேன். என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என சிந்தாமணி, வருங்கால கணவர் காலில் விழுகிறார். காலில் விழுவது என்பது, பாவேந்தரின் கொள்கைக்கு மாறுபாடானதாகத் தெரிந்தது.

ராஜகுமாரி

தமிழ் நாட்டிற்குள் வரும் மந்திரவாதி, பேய் பிடித்தவர் என வரும் பெண்ணுக்கு, “எருமை சாணியைக் கரைத்து ஊற்றிக் குடுமியில் (முடியில்) ஒரு சாண் வெட்டி இரண்டு நாட்கள் பட்டினி போட வேண்டும்” என மருத்துவம் செய்கிறார்.

திவான் பகதூர்

திரைப்படம் அரங்கைவிட்டு வெளியே பல இடங்களில் எடுக்கப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்ட ஊரின், நகரின் அமைப்பை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக திரைப்படம் அமைகிறது. அதே போல, அன்றைய மேல்தட்டு மக்களின், உடை, வாழ்க்கை முறை போன்றவற்றை நமக்குச் சொல்லும் திரைப்படமாகவும் இது விளங்குகிறது.

பர்மா ராணி

பர்மியத் தளபதியும், பிடிபட்ட இந்திய விமானி ஒருவரும் பேசுவதாக ஓர் உரையாடல் வருகிறது. பர்மிய அதிகாரி, ‘நீயும் ஆசியன், நானும் ஆசியன் இருவரிடமும் ஒற்றுமை வேண்டும்’ எனச் சொல்ல, சீனாக்காரனும்தான் ஆசியன்; இந்த ஒற்றுமை அவர்களிடம் இல்லையே என இவர் கேட்கிறார். இது அப்போதைய புவியியல் அரசியலை நமக்குச் சொல்கிறது.