1.

எனது புதன்கிழமைகள் இப்படித்தான் இருக்கின்றன

எனது புதன் கிழமைகள் இப்படித்தான்

கடல் நடுவே நீருக்குத் தவிக்க விடுகின்றன

மணலுக்குள் திசைகளை ஒளித்து வைத்து

விளையாட்டு காட்டுகின்றன

நெடுஞ்சாலையை குறுக்காகக் கடக்கையில்

சிக்னல் பச்சையில் வாகனங்களை ஏவி விட்டு

ஹாரன்கள் கதற என்னைப் பதற வைத்து

வேடிக்கைப் பார்க்கின்றன

கைப்பிடிச் சுவரற்ற ஆழ் கிணற்றில்

தலைகுப்புறத் தள்ளிவிடுகின்றன

தாவி மீன்கொத்தியாய் அள்ளிப் பறந்து – நடுவானில்

தவற விடுகின்றன

சாலையெங்கும் முத்தங்கள் சிதற என்னோடு பேசுகிற ஒருத்தி

அவளின் மூக்குத்தியின் நஷத்திர மினுங்கலில்

வியாழக்கிழமைகளின் விடியலில் கரைசேர்கிறேன் அல்லது

கரையொதுங்குகிறேன்

2.

மரமே காடு போல

இலைகள் மரங்கள்போல

பறவைக்கு

3.

கைவிடுகிறேன்
மலையுச்சியிலிருந்து…

நீ பறக்க

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.

பிருந்தாவின் முந்தைய கவிதை