UNLEASH THE UNTOLD

Tag: women issues

அச்சமூட்டுகிறதா மெனோபாஸ்?

மெனொபாஸ் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க சக்தியை முடித்துக்கொள்கிறது. ஓவரியன் தன் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்கிறது.
இதெல்லாம் ஒரு நாளில், வாரத்தில், மாதத்தில் நடப்பதில்லை. இது பல கட்டங்களில் நடைபெறும். எப்படிச் சூரியன் உதிப்பதும் மறைவதும் சட்டென இன்றி படி நிலைகளில் இருக்கிறதோ அப்படித்தான்.

எது கூட்டுக்குடும்பம்?

ஓர் ஆண், அவனது மனைவி குடும்பத்தோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் அவனுக்குப் பெயர் ‘வீட்டோட மாப்பிள்ளை’. ஏன் இங்கும் கூட்டுக்குடும்பமாகத் தானே இருக்கிறார்கள்? இதை மட்டும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற மாதிரி கூடி தானே இங்கேயும் வாழப் போகிறார்கள்?

சூப்பர் ஹீரோயின்கள்

கொடும் குளிர் தாக்கும் பனிச்சாரல்களில் ஆடிப்பாடும் போது கனவென்றாலும் நாயகருக்குக் கம்பளி கோட்டும் பூட்ஸும் தேவைப்படுகையில், சென்னை வெயிலில் அணிவது போல் கையில்லாத கவர்ச்சி ரவிக்கைகளும் கொலுசு மட்டும் அணிந்த பாதங்களுடனும் நம் நாயகியர் முகமலர்ச்சியுடன் ஆடிப்பாடுவதைக் கண்டதில்லையா?

பெண்மொழி என்று ஒன்றுண்டா?

மொழி என்பது ஒன்றுதான். அதில் பெண்மொழி என்று ஒன்று தனியாக இல்லை என்று வாதிடுபவர்கள் இருக்கலாம். பெண்களுக்கான அரசியலை, பெண்களுக்கான வலியை, அவர்கள் உணர்வுகளோடு தொடர்புடைய பிரச்னைகளை, குறிப்பாக உடலரசியலைப் பெண்களே பேசும்போது அல்லது எழுதும்போது அதில் தெறிக்கின்ற உண்மையையும் ஆழத்தையும் பலராலும் அறிந்துகொள்ள இயலும்.

36-24-36...

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் அசிங்கமாக உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாகச் சிரித்து இன்னும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் உடல்ரீதியான கேலிக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைக் கவரும் விதத்தில் உடலை வைத்துக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்கிறது.

பிரேக் த ரூல்ஸ்

உஸ்மானுக்கு ஒரு நீதியும் ரவிக்கு ஒரு நீதியும் வழங்கும் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற எழுதப்படாத சமூக விதிகள் சாமானிய மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருப்பின் உரக்கக் கூறுவோம் ’பிரேக் த ரூல்ஸ்’ என்று.

பெண்கள் பேய்களான கதை

இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.

ஓர் ஆண் குழந்தை இல்லையே...

” என்ன பெத்த மகராசி. ஆம்பள புள்ள வேணுமுன்னு மூணாவதும் பொம்பளப்புள்ள பெத்தப்போ இன்னொன்னு இருக்கட்டுமுன்னு சொன்னேனே… அடுத்தது உனக்கு ஆம்பள புள்ளை பொறந்திருக்குமே… ”

ராசாத்திக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

நான் எங்க போயிருக்கேன்? ஆனந்தை மட்டும் கூட்டிட்டுப் போவாங்க. என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எல்லாரும் ரொம்ப மோசம். இந்தப் பொம்பள பிள்ளைங்கனாவே ஒதுக்கிடுவாங்க.

'நோ சொல்லு பெண்ணே...'

பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.