உங்களின் முதன்மையான உறவு எந்த உறவு?
உங்கள் வாழ்வில் அந்த நபர் நீங்கள்தான். அந்த முக்கியமான உறவு உங்களுக்கும் உங்களுக்குமான உறவுதான். ஏனென்றால் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர், உங்கள் வாழ்வில் நடந்தவை குறித்து அனைத்தும் அறிந்தவர் நீங்கள்தாம். இதுவரை ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அதிக நேரம் செலவிட்டதும் உங்களிடம்தான்.