அம்மாவின் மன மாற்றம்
காரில் கிளம்பிச் செல்லும் மகளையே கண் கொட்டாமல் மாடியிலிருந்து பார்த்த ராணிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதுவும் அவள் தெருமுனையில் சென்று திரும்பி மறையும் வரை மாடியையே பார்த்துச் சென்றதைக் கண்ட போது…
காரில் கிளம்பிச் செல்லும் மகளையே கண் கொட்டாமல் மாடியிலிருந்து பார்த்த ராணிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதுவும் அவள் தெருமுனையில் சென்று திரும்பி மறையும் வரை மாடியையே பார்த்துச் சென்றதைக் கண்ட போது…
அவள் ஏற்கனவே எவ்வளவோ செய்துவிட்டாள். முதலில் அவள் கணவன் அடிக்கத் தொடங்கிய நாட்களில் ஓடிச் சென்று அவள் வீட்டில்தான் தஞ்சம் புகுவாள். ஆனால் அவள் கணவன் அவளை அங்கு தேடி வந்து அவளை வசைபாடியதோடு நில்லாமல் ஒருமுறை அவனைத் தடுத்து கைநீட்டிய அவள் கணவன் முத்துராசு அண்ணனோடு அவளைச் சேர்த்து அசிங்க அசிங்கமாக பேசவும், இனியும் அவர்களுக்கு அவளால் தொல்லை வரக்கூடாது என்று நினைத்து வீட்டோடு இருந்துவிட்டாள்.
”நாம ஃபியூச்சர் பத்திப் பேசலாமே” என்றவாறே அவளின் கையை எடுத்துத் தன் இடக்கையில் வைத்துக் கொண்டு, தன் வலக் கையால் மெதுவாக அவளின் கை பெருவிரலின் அடியிலிருந்து மேலாக அழுத்தி நீவிவிட்டான். ஒவ்வொரு விரலுக்கும் அதே அழுத்தம் தந்தான். உள்ளங்கையில் சரியான அழுத்தத்தில் சிறு வட்டமாக அழுத்தி, அப்படியே பெரிய வட்டமாக வரைந்தான். அந்த மசாஜ் அவளுக்கு அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இதமாக இருந்தது.
“ஷாலினி, உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இன்னும் மூணே மாசத்துல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். இதுல கண்டிப்பா, நான் கிளியர் பண்ணிருவேன். ஆன்சர் கீ செக் பண்ணிப் பாத்ததுல ஸ்கோர் நெறையவே வந்திருக்கு. இன்னும் மூணு மாதம்தான். கொஞ்சம் பொறுத்துக்கோ. நீ சீக்கிரமே வேலைய விட்டுடலாம். அன்னைக்கு நான் பேசுனது தப்புதான். நான், அக்கா கிட்ட பேசிக்கிறேன். தயவு செய்து கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்.”
இரண்டு நாள் கழித்து கம்ப்யூட்டரை ஆன் செய்தவளுக்கு, மெயில் பாக்ஸில் இருந்த அத்தனை மெயில்களையும் பார்த்து தலை சுற்றியது. இரண்டு நாள் லீவ் எடுத்தாலே இதுதான் பிரச்னை. சரி, பார்த்துக்கலாம் என்றவாறே கண்களை ஸ்க்ரீனில் பரவவிட்டாள்.
பின்னால் நின்று கொண்டு, கைகளில் இருந்த பேப்பரால் மெதுவாக ஷாலினியின் தோளில் தட்டி, ஹலோ என்றான் நவீன். அவள் திரும்பும் வேளையில் பக்கத்தில் இருந்த சேரைத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ஷாலினியின் பக்கத்தில் உட்கார்ந்தான். “என்ன ஆச்சு? கொஞ்சம் டல்லா இருக்குறது போல இருக்கு. ஏதாச்சும் பிரச்னையா?” என்று கரிசனத்துடன் கேட்டான்.