மூன்று விதமான குணாதிசயங்கள்
எப்போதும் அடிபணிந்து கொண்டிருப்பவர் தன் வாழ்வின் மீதே பெரும் கசப்பில் இருப்பார்கள். அது மெல்ல மெல்ல தனது வாழ்க்கையை ரசித்து மனம் போல் வாழ்பவரின் மேல் பொறாமையாக மாறும். பொறாமை கொண்ட மனதில் அமைதி ஏது? எப்போதும் உணர்வுகள் கொந்தளிப்பில்தான் இருக்கும். மிகச்சிறந்த உதாரணம் மாமியாரும், மருமகளும். இன்றைய மாமியார்கள் பலர் தங்கள் வாழ்வு முழுதும் தனக்கென ஏதும் யோசிக்காமல் கணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள், ஒரு வேளை பொருளீட்ட பணிக்குப் போனால் அந்தச் சுமை என அத்தனை பொறுப்பையும் சுமந்தவர்கள். குடும்பச் சுமை மொத்தமும் தலையில் இருந்தாலும், தான் சுயமாகச் சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள். தனக்கான சின்ன சின்ன தேவைக்குக்கூட கணவனையோ வீட்டுப் பெரியவர்களையோ கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள்.