UNLEASH THE UNTOLD

Tag: relationship

உறவாடும் திறனை மேம்படுத்துவது எப்படி?

தோல்வி வரும் போது, அதையும் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அதைத் தலைமைதான் தோளில் சுமக்க வேண்டும். இல்லாவிடில் தோல்வி வரும்போது தன் பெயர் கெட்டு விடுமென எவரும் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.

எது ஆரோக்கியமான உறவு?

ஒவ்வோர் உறவும் வாழ்வின் பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை தொடர்ந்து வருகிறது. சில உறவுகள் கடைசி வரை, சில பாதி தூரம் வரை, எப்படியாயினும் நமக்கு அது சுமுகமான உறவாக இருக்கும் போது, அது தொடராத போதிலும், மனதில் அந்த இனிமை மட்டுமே இருக்கும்.

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

பெண் - உணர்வுகளின் பொதியல்!

‘சிந்துபைரவி சுஹாசினிபோல் ஒரு காதலி வேண்டும். ஆனால், சுலோச்சனா போல் ஒரு மனைவி வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் ‘அப்படி’ ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, ‘இப்படி’ ஒரு பெண்மேல் ஆசைப்படுவதும், சதா தன் மனைவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் தனது கலவியல் உணர்வுகளைத் தூண்டாதது இந்த ‘அப்பாவி மனைவியின்’ தவறுதான் என்றும் தங்களுக்குத் தாங்களே காரணங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

உறவுகளில் மகிழ்ச்சியைப் பெற...

தனக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்ற தெளிவு இருப்பதால், தங்களுக்காகத் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

பிறர் அறிவுரைகளா? உங்கள் துணையா?

உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.