குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...
குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.