UNLEASH THE UNTOLD

Tag: hemalatha

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.

மறுகன்னத்தைக் காட்டத்தான் வேண்டுமா?

எதிர்த்து நிற்க வேண்டும். நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். எந்த அடிப்படையிலும் தன்னைத் தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவன் என்று இனம்பிரிப்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதைப் போலவே இங்ஙனம் கட்டவிழும் வன்முறையைக் கண்டும் காணாமல் செல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை இனியும் காட்ட இயலாது. பிறரை அடிக்க முற்படும் முன் தன் கன்னத்தையும் அடிப்பவன் தயார் செய்துகொள்ளட்டும்.

பெண்மொழி என்று ஒன்றுண்டா?

மொழி என்பது ஒன்றுதான். அதில் பெண்மொழி என்று ஒன்று தனியாக இல்லை என்று வாதிடுபவர்கள் இருக்கலாம். பெண்களுக்கான அரசியலை, பெண்களுக்கான வலியை, அவர்கள் உணர்வுகளோடு தொடர்புடைய பிரச்னைகளை, குறிப்பாக உடலரசியலைப் பெண்களே பேசும்போது அல்லது எழுதும்போது அதில் தெறிக்கின்ற உண்மையையும் ஆழத்தையும் பலராலும் அறிந்துகொள்ள இயலும்.

பிரேக் த ரூல்ஸ்

உஸ்மானுக்கு ஒரு நீதியும் ரவிக்கு ஒரு நீதியும் வழங்கும் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற எழுதப்படாத சமூக விதிகள் சாமானிய மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருப்பின் உரக்கக் கூறுவோம் ’பிரேக் த ரூல்ஸ்’ என்று.

பொருளாதாரச் சுதந்திரமும் பெண்விடுதலையும்

திருமணத்திற்குப் பிறகு எத்தனை பெண்களால் தன் பெற்றோர்களுக்குப் பிறந்த வீட்டிற்குப் பொருளாதார உதவியைத் தொடர்ந்து செய்துவிட முடிகிறது? பாலின சமத்துவத்தில் மிக முக்கியமானது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே.

இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீதப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நுட்பமாகச் சிந்தித்தால் பல பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

ஆண்மை அழியட்டும்

அறிவு என்பதையும் வீரம் என்பதையும் ஆண்களுக்கான குணங்களாகவே இச்சமூகம் எப்போதும் கட்டமைத்திருக்கிறது. அதனால்தான் ஆண்மை அழியட்டும் என்றார் பெரியார். சமதர்மமும் சமத்துவமும் ஓங்க வேண்டுமென்றால், பாலின பாகுபாடு மாற வேண்டுமென்றால், ஆண்மை என்ற அதிகாரம் அழியத்தான் வேண்டும்.

'நோ சொல்லு பெண்ணே...'

பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.

புனிதங்களும் புண்ணாக்குகளும்

பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.

பாதைகள் உனது, பயணங்கள் உனது...

இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலர் தேசாந்திரிகளாகவும் சிலர் நாடோடிகளாகவும் திரிகின்றனர். சிலர் பொருள் ஈட்டவும் வாழ்க்கைக்கான பாடுகளுக்காகவும் பயணிக்கின்றனர். இந்த வாழ்வே ஒரு பயணம். நகர்தலே வாழ்க்கை.

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்!

நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.