UNLEASH THE UNTOLD

Tag: health

      மனநலம் காப்போம்

உலக சுகாதார நிறுவனத்தின் 2019 தரவுகளின்படி 8 பேரில் ஒருவருக்கு மனநல பிரச்னை அல்லது குறைபாடு இருப்பதுடன், உலகம் முழுவதும் 97 கோடிக்கு அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியப்படுகிறது. குறிப்பாக…

மன நலன் பேணுவோம்!

உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல்…

உணவும்பெண்களும்

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நண்டைச் சமைப்பதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் பெண்மணி, நண்டைப் பார்த்தவுடன், “ஏம்மா, நண்டு செய்யறீங்களே, உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்குமா?” என்று கேட்டார். “ஏன்…

நீர்க்கட்டிகள்

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு அவர்களின் கணையத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது. சுரப்பு இருந்தாலும் இன்சுலின் எதிர்ப்பு நிலை என்கிற நிலை ஏற்படும். இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்படுவதால் பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் பெறுவர். இயல்பாகவே எல்லாருக்கும் தோலுக்கு அடியில் கொழுப்பு இருக்கும். இது இயற்கை. ஆனால், உடல் பருமன் ஏற்படும் போது தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்புப் படலத்தின் தடிமனும் கூடுகிறது.

உங்களுக்கு ஒரு கடிதம்…

இளமையில் சம்பாதித்து சேர்த்த பணத்தை, முதுமையில் மருத்துவச் செலவிற்குப் பயன்படுத்துவதற்காகவா இத்தனை ஓட்டம்? ஓடும் ஓட்டத்தை நிறுத்தி, சற்று உங்களை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். “உண்மையிலேயே நீங்கள் ஆரோக்கியமுடன் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் உலகிலேயே மிகப் பெரிய மில்லியனர்”    

வீட்டில் என்ன விசேஷம்?

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

முப்பது வயதுக்குள்ளே குழந்தையா?

சரி, ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா? ஆண்களின் விந்தணுக்கள் கருமுட்டைகளைப் போல் அல்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஓர் ஆணின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல ஒரு விந்தணுவின் சுழற்சி முடிவதற்கு இரண்டரை மாதங்கள் வரை ஆகும். இதனால்தான் கருமுட்டைகளில் ஏற்படும் பிரச்னைகளைவிட விந்தணுக்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குணப்படுத்துவது சுலபம். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இவை அனைத்தும் பெரும்பான்மையான விந்தணு பிரச்னைகளைக் குணப்படுத்த போதுமானவை.

நீண்ட ஆயுளுக்கு இடைவெளி அவசியம்

உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.

குர்தியும் பட்டியாலா பேண்ட்டும்

“சம்சாரி வீட்டில் வாக்கப்பட்டு மாடு, கண்ணு, காடு, கரைன்னு போறவளுக்குச் சீலதாண்டி அழகு. ஏழு வயசுல பேரன் இருக்காங்கறத மறந்துட்டு நைட்டி போடுறேன்னு கேக்குறயே? உனக்கு எம்புட்டு தைரியம்? அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க எல்லாம் பார்த்துச் சிரிக்கமாட்டாங்க? கோமாளி மாதிரி நைட்டிய மாட்டிகிட்டுத் திரியணும்னு கிறுக்குத்தனமா ஆசைப்படாதே’’ என நைட்டி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

நாற்பதுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது...

குழந்தைகள் படிப்பு அல்லது வேலை, திருமணம் காரணமாகப் பிரிந்து தூரமாகச் சென்றுவிட, அதுவரை குழந்தைகள் உலகம் என்று இருந்த சிலர் Empty nest Syndrome இல் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மெனோபாஸ் சிக்கலுடன் இதுவும் சேர்ந்து எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் எழும் மனப்போராட்டங்களைத் தெளிவாகப் பிரித்து உணர முடியாமல் மனச்சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.