UNLEASH THE UNTOLD

Tag: gender equality

பெண்களும் தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்களும்

சமீபத்தில் பாசுமதி அரிசி விளம்பரம் ஒன்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.  மாமனார் ஈஸிசேரில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார், “லன்ச்க்கு தேங்காய் சாதம் ஓகேவா?” என்று மருமகள் கேட்க, “பாசுமதி அரிசியில தேங்காய்…

பருவகாலப் பதற்றங்கள்

சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத்…

பெண்களும் பாலினச் சமத்துவமும்

பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.

பாலினம் அறியலாமா?

மரபணு ஆலோசனை மையங்களுக்கென்றே தனி நெறிமுறைகளும் உண்டு. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தாலோ அல்லது சந்தேகத்தின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளும் சிகிச்சைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க‌ வேண்டும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்தக் குழந்தைதான் வேண்டும் என்று பாலினத்தின் அடிப்படையில் எந்தத் தனிப்பட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளக் கூடாது.

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

ஆணாதிக்க வேர் பிடித்த பெண் சமூகம்

பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.