UNLEASH THE UNTOLD

Tag: friendship

நண்பர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்?

இவர்கள் அவள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்றியமையாதவர்கள். ஆனால், இந்த எல்லாக் காலகட்டத்திலும் அவள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தூக்கிச் சுமக்கும் அவளைவிட அவளை நன்கறிந்த, அவளை அவளுக்காக நேசிக்கும், அவள் ஏற்ற இறக்கங்களை அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பகிர்ந்து, அவர்களை மீண்டும் தன்னிலையடையச் செய்யும் அவள் சாயும் தோள்கள் அவளுக்கு தோழி என்கிற பெயரில் வாழ்க்கை அளித்த தலைசிறந்த ஆசிர்வாதம்.

எல்லைக்கோடு தெரியுமா?

அது எவ்வளவு நெருக்கமான உறவோ நட்போ அந்த எல்லையை மதிக்கும் போது, உறவு இனிமையாகவும் பலமாகவும் உருவாகிறது. இதற்கு முதலில் நம்மை நாம் அறிந்திருக்க வேண்டும், எத்தனை தூரம் மற்றவர் தலையீட்டை அனுமதிக்கலாம், யாரை எங்கே நிறுத்துவது நம் மன நிம்மதிக்கு நல்லது என்கிற தெளிவு தேவை. சில நேரம் இந்த எல்லையின் காரணமாகச் சில உறவை, நட்பை இழக்க நேரலாம். தன் சுய நேசமும் மதிப்பீடும் நன்றாக உள்ள ஒருவர் அதற்கஞ்சுவதில்லை.

நட்பு எனப்படுவது யாதெனின்...

நிறையப் பெண்களின் குழந்தைகளுக்கு தன் தாய்க்கு நண்பர்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது அதிர்ச்சியான ஒன்று. தந்தையின் பெண் நட்புகளைக் கூட ஏற்றுக் கொள்பவர்கள், தாயின் தோழிகளைக்கூட விரும்புவதில்லை என்பது கசப்பான செய்தி.      

உங்களுக்கு நட்பு வட்டம் இருக்கிறதா?

பெண்களுக்குத் தோழிகள் வட்டம் மிகவும் தேவை. ஆணாதிக்கச் சமுதாயம், ஒரு பெண்ணாக அவளிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக மிக அதிகம்.