அடுத்தவரின் சுதந்திரத்தையும் மதிப்போம்!
தானும் ராமும் எத்தனை நெருக்கமான நண்பர்கள் என்றாலும் ராமுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை மறந்ததுதான் காரணம். ராம் எல்லாவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டிய அவசியம் இல்லை, எதைப் பகிரலாம் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்கும் நட்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே. நாம் அனைவருமே அவ்வப்போது தவறும் இடம் இது, நம் அன்பின் ஆழம் காரணமாக அடுத்தவரின் மேல் கண்மூடித்தனமான ஆதிக்கம் செலுத்துவோம், பல நேரம் நம்மை அறியாமலேயே. நல்ல வேளையாக இந்தப் பிணக்கை ராமிடம் காட்டவில்லை. அப்படி நடந்திருந்தால் அந்த அழகிய நட்பில் விரிசல் விழுந்திருக்கும்.