UNLEASH THE UNTOLD

Tag: casteism

‘எல்லாரும் சமம்தானே டீச்சர்?’

கல்வி வளாகங்களில் சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்களின் வழி அவர்களது குடும்பங்களுக்கும் சமத்துவம் கடத்தப்பட வேண்டும். அத்தகைய கற்றல்முறை ஏற்பட வேண்டும். “எல்லாரும் சமம்தானே டீச்சர்” என்று கேட்கும் மாணவனைப் போன்று சிந்திக்கும் திறன்கொண்ட, கேள்வி கேட்கும் ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே கல்வி வளாகங்களின் நோக்கமாக வேண்டும்.

இப்போ யாருங்க சாதி பார்க்கிறாங்க?

மதம், சாதி, குடி, இனம், மொழி பேதங்களை மறந்தும், பேசச் தயங்கியும், பேசப் பயந்தும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குச் சாதி, மத, இன, குடி, மொழி பேதங்களைப் பேசும் தைரியத்தை ஊட்டி எழுப்புகின்றனர் இவர்கள். “நீ என்ன சாதி?” என்று கேட்க வெட்கப்பட்டவன், நான் இன்ன சாதி என்று அறிவிக்க சாதிக்கயிறு கட்டிக்கொள்ளும் துணிச்சலை உண்டாக்கியிருக்கிறது இவர்கள் செய்யும் அரசியல்.

சாதிகள் இருக்கேடி பாப்பா...

என் சிறுவயதில் எங்கள் ஊர்த் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், ஒடுக்கப்பட்ட மக்கள் கடையின் பின்வாசலில்தான் அமர்ந்து தேநீர் அருந்துவதும் வழக்கமாக இருந்தது. அப்புறம் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டாலும் காகித டம்ளர்கள் அந்த இடத்தைச் சிலகாலம் பிடித்திருந்தன. இப்போதுதான் எல்லாருக்கும் ஒன்றுபோலக் குவளைகள் வழங்கப்படுகின்றன. சிறு குழந்தைகள்கூட, “நீங்க என்ன ஆளுங்கன்னு எங்கம்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க” என்று இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். நாகரீகத்தில் முதிர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்தக் காலத்தில்தான் சாதி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் சாதியம்

இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.

பேய் என்னும் கட்டுக்கதையை அழித்தொழிப்பது எப்படி?

மனநல மருத்துவர்கள் ‘பெண்ணொடுக்கம்’ என்ற பாரம்பரிய மரபிலிருந்து வெளியேறி, ‘பாலின சமத்துவம்’ என்ற அறிவியல் பாதையில் பகுத்தறிந்து பயணித்து மக்களின் உளவியல் நலத்தைப் பேண வழிவகை செய்ய வேண்டும்.

சாதி தெரியாமல் வளர்வானா என் பிள்ளை?

சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது எளிது. பேசினால் உன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லலாம், தகுதியை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்று சொல்லலாம். அதனால் என்ன? இந்த உலகில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமையாக இருப்பதும்கூட நாம் செய்யும் அநீதி தான். முடிகிற போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நில். அவர்களுக்குத் தேவைப்படுவதை, உன்னால் ஆனதைச் செய். நீ அவர்களுக்குக் காவலன் அல்ல, அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதற்கான சூழல் அமைய உன்னால் இயன்ற வரை உதவி செய். இதை உன் சமூகக் கடமையாகக் கொள்!

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய் - 2

மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமையைச் செய்கின்றன. ஆதிக்க சாதிப் பெண்கள் வேறு சாதி ஆண்களைக் காதலித்தால், சாதியக்குடும்பங்கள் மகள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய்-1

வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.