UNLEASH THE UNTOLD

Tag: சிறுகதை

தீப் பறக்கும் முலைகள்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப்  பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத,…

செண்பகப்பூ சூடியவள்

மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன்…

குழவி

சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள். முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ……

பதுமை

சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும்…

பட்டாம்பூச்சி

மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…

ஆண் கிரீடம்

கிணி கிணி, என்று அலாரம் அலற, தடால் புடாலென்று அடித்துப் பிடித்து எழுந்து அலாரத்தின் தலையில் உள்ள பட்டனை அழுத்தி நிறுத்தினாள் சூர்யா. அலாரம் சத்தம் அடங்கிவிட்டது. ஆனால், சூரியாவின் இதயத் துடிப்புதான் வேகமாக…

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது…

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

இருளாயி

வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…

பயணம்

வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்….