UNLEASH THE UNTOLD

Top Featured

கனடா எனும் கனவு தேசம்-2

என்னை நம்பி திசை, வழி கேட்டவர்கள் பட்ட பாடு, அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதிகம் பழக்கமான ஊரிலேயே, உறியடி விளையாட்டில் சுற்றுவது போல இரண்டு முறை சுற்றிவிட்டால் போக வேண்டிய திசை குழம்பிவிடும், கண்ணை கட்டாமலேயே.

பெண் ஓவியம்

“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

யாருங்க இந்த குடும்பப் பெண்?

கல்யாணத்திற்கு முன்பு, தான் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் ஆடைகளை அணியும் பெண்ணையும், குட்டை முடி வைத்திருக்கும் பெண்ணையும், மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்கு வரும் பெண்ணையும், “இதெல்லாம் குடும்பப் பெண்ணுக்கு அழகா? இப்படியெல்லாம் அலைஞ்சா, நாளைக்கு உன்னை எவன் கட்டுவான்?” என்று குடும்பத்தினர் கண்டித்து திருத்தப் பார்ப்பார்கள். முடியாவிட்டால்,”கல்யாணம் வரைக்குமாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ”, என்று கெஞ்சுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ? அதை புகுந்த வீடு பார்த்துக் கொள்ளும்.

திகைப்பு

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.

அம்மாவின் கொடுமைகள்

க்ளாஸ் முடிஞ்சவுடனே, ஸ்கூட்டரில் போய்க்கொண்டு இருக்கும்போது, வழக்கம்போல ‘தண்ணி குடிச்சியா’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் வண்டியை நிறுத்தி,
‘நீ கீழ இறங்கு’ ‘…. …. ….. ’
‘இப்ப இறங்குறியா இல்லையா’ என்றார்.
நான் இறங்கிவிட்டேன்.
‘வீட்டிற்கு நடந்து தானாகவே நீ வா’ என்று சொல்லி வேகமாக ஸ்கூட்டரைக் கிளப்பினார்.

கேளடா மானிடவா-1

ஒற்றை மகனை அனுப்புகிறாயே, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை இல்லையா, எது குறித்தும் பயமில்லையா என்று. அதற்கு அந்த அம்மா சொல்கிறார், மேலே கையைக் காட்டி ‘சாமி, இருக்குது; அது பாத்துக்கும்’ என்று. ஊரில் இருக்கும்போது தான் பார்த்துக்கொள்வேன்; வேற்றூரில் சாமி பார்த்துக்கொள்ளும் என்று. இவை பற்றி, ‘இது இராஜபாட்டை அல்ல’ என்கிற தனது நூலில் நடிகர் சிவகுமார் சொல்லியிருப்பார்.

வானொலி நினைவுகள்

இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம், ஆசியாவின் முதல் வானொலி நிலையம். முதல் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியைக் கொண்டு,1922 ஆம் ஆண்டு, நிறுவப் பட்டது. டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அங்கிருந்து அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தான்.

தேவரடியார்கள் யார்?

தேவரடியார் என்றாலும் கடவுளுக்கு சேவை செய்த உயரிய அர்ப்பணிப்புக் கொண்ட பெண்களைப் பற்றிய நினைவுதான் வரவேண்டும். அடியார் என்ற சொல் அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்ததாகும். அடி என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள்.

மூவர்

சில மணி நேரம் வரை அப்படியே நிர்வாணமாய் இருந்து குளித்துவிட்டு, வீட்டின் அறைகளில் கூட அப்படியே திரிவாராம். வளருக்கு முதலில் சங்கடமாக இருந்தது போகப்போக, மாமியாரின் மனநிலை புரிந்து அவர் மீது இரக்கம் தான் தோன்றியதாம். ‘உடம்ப, ஒத்த அறை மட்டும் இருக்குற வீடு மாதிரியே வச்சுக்கிட்டுத்தான் செத்துப் போப்போறேன். ஜெயில்ல இருக்குற மாதிரி. நீயாவது அப்படியெல்லாம் இருக்காத’, என்று அடிக்கடி சொல்வார் என்றாலும் மகன் முன்னால் வளரிடம் ஒரு சொட்டுக் கூட அன்பு காட்டியதில்லை.