UNLEASH THE UNTOLD

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்

பாரிஸ் வாழ்க்கை

பாரிஸ் அழகான நகரம். சில நாட்களாக நீ இங்கு என் அருகில் இல்லையே, இந்த அற்புதத்தையும் அழகையும் நீயும் அனுபவிக்கலாமே எண்ணிக்கொண்டே, உயிரோடடமான மனிதர்கள் நிறைந்த இந்த வீதிகளில் வலம் வந்தேன்.

எப்போது சந்திப்போம்?

உன் புத்தகம் எழுதி முடிக்கும்போது ஏதும் பிரளயம் உண்டாகிவிடக் கூடாது. ஏனெனில் அதன் வெளியீட்டை எதிர்பார்த்து நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். நாம் நேரில் பேசுவோம்.

மகள் எனும் தேவதை

குழந்தை என் கவனத்தைத் தொடர்ந்து திசைதிருப்பி, அழகாகப் புன்முறுவலுடன் பேச முனைகிறது. உன்னால் இவளின் அழகைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்- 4

ட்ரையர் நகரின் அனைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் நீதிமன்ற கவனிப்பும் இருந்தாலும்கூட, என் இதயமும் ஆத்மாவும் உன் பக்கம்தான் இருக்கிறது.

என் அன்பே, தூய இனிய ஒரே இதயமே...

இதுபோல நீ எப்போதுமே அளவிற்கு அதிகமாகக் காதலிக்கப்படுபவனாகவும் இனிமையாகவும் அழகுடனும் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். மறுபடியும் எப்போது வருவாய்?

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-3

அந்த அயோக்கியன் என்ன பண்ணினான் தெரியுமா?அவன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கோண்டு எனது ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் விட்டான். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அதற்காக அவனை திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை கண்டுகொண்டதாகவோ, என் பேதலிப்பை உணர்ந்தவனாகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச்சொல்லவேண்டுமானால் நல்ல பொருள்களெல்லாம் போனது மாதிரி இந்த ஆறு பென்னியும் போய்விட்டது. அது ஒரு ஏமாற்றமே!

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-2

என் இனிய இளம் கார்ல், ஒன்றுமட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும். இங்கு இந்த வீட்டில் உன்னுடைய இந்த இனிய இதயம் உன்னையே சார்ந்து உன் மீது நம்பிக்கையுடனும், துயரப்பட்டும் முற்றிலும் உன் எதிர்காலத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பே, அன்புச்சுவையான இதயமே, நான் மறுபடியும் எப்படியாவது உன்னை சந்திக்க விழைகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக நான் இன்னும் அந்த நாளை குறித்துக்கொள்ளவும் இல்லை, குறிக்கவும் முடியவில்லை.

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்

எனது இதயச்சிறைக்குள் உங்கள் காதல் அமர்ந்து விட்டால்,பின்பு என்னைப் பற்றிய நினைவுடனும், காதலுடனும் எனக்கு ஆறுதலாகவும் இருப்பீர்கள்.நீங்கள் எல்லா விசயங்களிலும் மிகவும் சரியாக இருப்பதாக நான் முழுவதும் நம்புகிறேன், ஆனால் எனது நிலையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்,நான் சோகமான நினைவுகளில் மூழ்குவதையும்,இவற்றையெல்லாம் பற்றி யதார்த்தமாக யோசித்தால் என்னிடம் அவ்வளவு கடினமாக நடந்துகொள்ளமாட்டீர்கள்.