UNLEASH THE UNTOLD

நேர்காணல்களும் நினைவலைகளும்

துயரத்திலிருந்து என்னை மீட்டது எழுத்து! - ஆர். பொன்னம்மாள்

எனக்கு 19 வயது இருக்கும் போது தமிழ்நாடு என்கிற பத்திரிகை நடத்திய ஒரு கதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்பினேன். இரட்டைப்பரிசு எனும் அந்தக் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அதைப் பார்த்ததும் வானில் இறக்கைக் கட்டிப் பறப்பது போல் இருந்தது. அந்தக் கதைக்குப் பத்து ரூபாய் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் அது பெரிய பணம். அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி கையால் எனக்கு அந்தப் பரிசு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக எனக்குமே இரட்டைப்பரிசுதான்.

"குழந்தைகள் நிறைய வாசிக்கணும்!” - எழுத்தாளர் தேவி நாச்சியப்பன்

1983இல் ‘கோகுலம்’ சிறுவர் மாத இதழில் என் முதல் மொழிபெயர்ப்புக் கதை வெளியானது. தொடர்ந்து எனது மொழிபெயர்ப்புக் கதைகள் சிறுவர் இதழ்களில் வெளிவந்தன; மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரிக் காலங்களில், புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், தந்தையின் சொற்படி மரபுக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தந்தையாரின் வழிகாட்டுதலின்படி குழந்தை எழுத்தாளரானேன்.

தேடி வந்த அங்கீகாரம்! எழுத்தாளர் சீதா ரவி

வாழ்க்கையை அதன் போக்கிலே ஏத்துக்கணும். அது வர்ற வழியில் எதிர்கொள்ளணும். வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அதீத மகிழ்ச்சி, அதீத துயரம் இரண்டுக்குமே அர்த்தமில்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, அவை மாறிக்கிட்டே இருக்கும். பெண்கள் தங்களுடைய தேவைகளைப் போராடித்தான் பெற வேண்டும் என்கிற சூழல் வந்தால் போராடத் தயங்கக் கூடாது. போராடும் முறைகளை அவங்கவங்க வாழ்வியல் சூழலுக்குத் தகுந்த மாதிரி தனது ஆளுமை, மதிநுட்பத்தால் வடிவமைச்சுக்கணும்.

தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்

ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். உலக வரலாறு பற்றிய அவருடைய பொது அறிவும் வியப்பை அளிக்கும் வண்ணம் இருந்தது.

குமுதினி (1905 – 1986)

மகாத்மா காந்தியிடம்  மட்டற்ற பக்தி கொண்டு சுதந்திர பாரதம் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர்களில் குமுதினியும் ஒருவர். காந்தீயத்தை முன் வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கூறுகின்றன. இவற்றை ஒரு  மணித்திரள்  எனலாம். இதற்கு முக்கிய காரணம் வெறும் பேச்சு, எழுத்து என்று அவர் பின்தங்கவில்லை.

சாகித்ய அகாடமி கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகி!

அம்மாவின் பனித்துளி நாவல் ரொம்ப பிரபலமாக்கியது. அம்மா பனித்துளி நாவல் எழுதியபோது நிறைய தோழிகள், ‘இந்த நாவலை எழுதியது உங்க அம்மாதானே நாங்க பார்க்கணும்’ என்று சொல்லி அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடைய அம்மாக்களோ அம்மாவை நவராத்திரிக்கு வரச்சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போதுதான் அம்மா ஒரு பெரிய எழுத்தாளர் என்று உணர்ந்தேன். அம்மாவுடைய அருமை பெருமையைக் காலந்தாழ்ந்த பின்னே நாங்கள் புரிந்துகொண்டோம்.

சுதந்திர வானில் பறந்தவர்!

அப்பாவின் கதைகளைப் படித்தும் வானொலி நாடகங்களைக் கேட்டும் ரசித்ததோடு, ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஒரு பெண்ணின் கோணத்தில் சில தர்க்கங்களையும் எடுத்துரைத்ததை ரசித்துப் பாராட்டும் விதமாக பார்க்கர் பேனாவில் ‘கோமதி சுப்பிரமணியம்’ என்று பெயர்பொறித்து ‘நீயும் எழுதத்தொடங்கு’ என அம்மாவிற்கு அந்தப் பேனாவைக் கொடுத்திருக்கிறார் அப்பா. திருமணத்திற்குப் பிறகு அப்பாவின் ஊக்கத்தோடு தன் முதல் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார் அம்மா.

தள்ளாடிய வயதிலும் தள்ளாடாத இலக்கிய ஆர்வம் - எழுத்தாளர் பூரணி அம்மாள்

கவிதைகள் எழுதுவதோடு இந்தியில் சாகித்யம் பெற்ற அம்மா, பல பெண்களுக்கு இந்தி கற்றுக்கொடுத்து வந்தார். இந்தியிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான சரஸ்வதி ராம்நாத் அம்மாவிடம் இந்தி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணங்களே வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன! - வி. உஷா

வாசிப்பதன் இனிமையைச் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டதுதான் என்னுடைய நல்வாய்ப்பாகத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கின்றன? ஏன், எதற்காக, எப்படி என்கிற கேள்விகள் இயல்பாகவே எழ ஆரம்பித்தன. ஊழ்வினை, பிறவிப்பயன் போன்ற எதுவும் நிஜமில்லை, அனைத்துமே மனிதன் உண்டாக்கியவை என்பதும் புரிய ஆரம்பித்தது. அதுவே எழுதவும் ஆதாரமாக இருந்தது. இருக்கிறது.