UNLEASH THE UNTOLD

சிறுகதை

தீப்பாஞ்சாயி

ஹூக்ளி நதி சுழித்தோடிக் கொண்டிருந்தது. கரையோர மரங்கள் உதிர்த்த இலைகளையும், மலர்களையும், சருகுகளையும் நதி பாரபட்சமின்றி இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டு, நதிநீர் தங்கச் சரிகையாக மின்னிக் கொண்டிருந்தது….

குழவி

சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள். முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ……

பதுமை

சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும்…

பட்டாம்பூச்சி

மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…

ஆண் கிரீடம்

கிணி கிணி, என்று அலாரம் அலற, தடால் புடாலென்று அடித்துப் பிடித்து எழுந்து அலாரத்தின் தலையில் உள்ள பட்டனை அழுத்தி நிறுத்தினாள் சூர்யா. அலாரம் சத்தம் அடங்கிவிட்டது. ஆனால், சூரியாவின் இதயத் துடிப்புதான் வேகமாக…

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது…

சூதகம்

“ஆஹா… பொழுது விடிஞ்சும் விடியாமயும் உம் பொண்டாட்டி உக்காந்துட்டாளா..?  நல்ல சகுனம். இன்னிக்கு அம்மன் கோயிலுக்கு தக்காளி சோறு ஒரு பெரிய குண்டான் நெறைய செஞ்சு கொண்டு போகணும்.  நூத்தியெட்டு எலுமிச்சம் பழத்தை மாலையா…

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

இருளாயி

வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…

ஆற்றாமை

“பசங்க பின்னாடியே திரியறியே; உனக்கு வெட்கமாயில்ல?” அனிதா இப்படிக் கேட்டதும், அவளுக்குச் சட்டென்று கண்ணில் நீர்த் துளிர்த்தது. குரல் கம்மியது. வார்த்தைகள் வரவில்லை. “சரி சரி உடனே அழுதுராத. என்ன சொல்லிட்டேன் இப்ப. அவனுங்க…