உணர்வைக் கையாளணுமா, கட்டுப்படுத்தணுமா?
நம் மகிழ்ச்சி, துன்பம், வளர்ச்சி, வாழ்க்கை தரம் அனைத்தையும் முடிவு செய்வது நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல, அதை ஒட்டிய நமது உணர்வுகளும் அதன் தொடர்ச்சியான நமது செயல்களும்தாம். நிகழ்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கில்லை, அதனை ஒட்டிய உணர்வைக் கையாளும் ஆற்றல் நம்மிடம், நம்மிடம் மட்டுமே உள்ளது.