பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல், இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்.
0 min read