சமையல்கட்டை விட மனமில்லையா தோழிகளே?
பெண் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவே இருந்தாலும், “வீட்டில சமைப்பீங்களா? நீங்க சமைக்கறதுல உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச ரெசிப்பி என்ன?” போன்ற அநாவசிய கேள்விகளைக் கேட்டு, அவர் வீட்டில் சமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. “வீட்டில் சமைக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்ணை, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று மறைமுகமாகக் குத்திக் காட்டி பகடி செய்கின்றன. இது அப்பட்டமான உரிமைமீறல்.
