புரியாத புதிர்கள்
குழந்தை உருவானதிலிருந்து ஆறு வாரங்களுக்கு அந்தக் குழந்தை எந்தப் பாலினம் என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆண்களுக்கான Y குரோமோசோம் ஆண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைக் குழந்தை கருவாக உருவான ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி ஆண்களுக்கான ஹார்மோன்களும் உடல் வளர்ச்சியும் இருந்தால்தான் அந்தக் கரு ஆண் என்று வித்தியாசப்படுத்தப்படும். ஒரு வேளை அது போன்ற சுரத்தல்கள் இல்லை என்றால் அந்தக் குழந்தை பெண் என்று அடையாளப்படுத்தப்படும். அதாவது அந்தக் கருவிற்குப் பெண்களுக்கான XX குரோமோசோம்கள்தாம் இருக்கின்றன என்று அர்த்தம்