எதிர்மறை விஷயங்களைத் தூக்கிப் போடுங்கள்
ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? ஷைலஜா ஒரு பிரபலமான Motivation Training கம்பெனியின் M.D. அந்த கம்பெனியின் தலைமைப் பயிற்சியாளரும் அவள்தான். அவளது முகம் வராத பத்திரிகைகள் இல்லை. யூடியூபைத் திறந்தால் அவளது…

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!
யாரோ ஒரு குழந்தையின் மலர்ந்த புன்னகை, ஏதோ ஒரு வயதோகருக்குச் செய்யும் உதவி, முகமறியா மனிதரின் துயரத்தைத் துடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நம் மூளையில் டோபமைன் என்கிற வேதிப் பொருளைச் சுரக்க வைக்கும். இயற்கையாகவே நாம் மகிழ்வாக உணர்வோம்.
உங்கள் மனநலனில் பிரச்னை இருக்கலாம் என்று ஓரளவு தெரிந்தவுடன், அதற்காகப் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். உடனடியாகச் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும்தான். இரண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் பயிற்சி கைகொடுக்கும்.