UNLEASH THE UNTOLD

Tag: motherhood

தாய்மை எனும் ஷ்ரோடிங்கரின் பூனை

”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை….

எச்சரிக்கை - இங்கு தாய்மை விற்கப்படும்

எங்களது (அ) நாங்கள் பரிந்துரைக்கும் பிரசவ மையங்களில் சேர்ந்தால் வலிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் நடத்தும் கர்ப்பகால வகுப்புகளில் கலந்து கொண்டால் வயிற்றிலேயே குழந்தையை ஐன்ஸ்டைன் ஆக்கிவிடலாம் என்றெல்லாம் அளந்துவிட்டு, அதன் மூலம் தொழிலைப் பெருக்கிப் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.

குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...

குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

தோழியா என் தேவதையா

தாய்ப் பாசம் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நிர்க்கதியாய் நிற்கும் சூழலில் பிள்ளைகளிடம் காட்டும் கண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் அன்பே.

தாய்மைதான் பெண்ணின் அடையாளமா?

கருப்பையை ஆணாதிக்கச் சமுதாயமும் குடும்பமும் மதங்களும் ஜாதிக்கட்டமைப்பும் அரசாங்கங்களும் கட்டுப்படுத்துகின்றன. அவளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.