UNLEASH THE UNTOLD

Tag: Jewellery

முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட...

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா...

ஆண் குழந்தைகள் ‘வாளி’ அணிந்திருக்கின்றனர். வாளி என்பது சிறு வளையம். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கோயிலில் வைத்து காது குத்தும் விழா ஆண்களுக்கும் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அந்தோணியார் கோயிலில் வைத்து அந்தோணியார் பட்டம் வைத்து வாளி போடுவார்கள். அந்தோணியார் பட்டம் என்பது தலையின் வெளிப்புறம் மட்டும் சிறிது முடி வைத்து, மற்ற இடங்களின் மொத்த முடியையும் அகற்றும் வகையிலான மொட்டை.

டிரெண்ட் செட்டர் நதியா

அதுவரை கிராமத்தில் பெண்களுக்கான சைக்கிளை வயதான ஆண்கள், காலைத் தூக்கி போட்டு ஏறுவதற்கு எளிதாக இருக்கும் என வாங்கினார்கள். வீட்டில் சைக்கிள் ஓட்டும் பெண்கள்கூட ஆண் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆண்களுக்கான சைக்கிளைத்தான் பயன்படுத்தினார்கள். நதியா சைக்கிள் பிரபலமான பின் தான் லேடிஸ் சைக்கிள் பிரபலமானது. ஊரில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பேரழகு!

தன்னை ’நடமாடும் நகை ஸ்டேண்டாக’ வைத்திருக்கிறார்கள் என்று உணராமல் பெண்களும் தங்க நகைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். நகையுடன் சுதந்திரமாக எங்காவது செல்ல முடியுமா?