UNLEASH THE UNTOLD

Tag: G.SOWMIYA

களப்போராளி சாஜிதா

சமூகம் அல்லல்படுவதையும், அழிவதையும் கண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? அவர்கள் எந்த மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும் அவர்களும் எங்கள் உடன்பிறப்புகள் தானே?. கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டு என் மனம் துயரத்தால் நிரம்பியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

சமத்துவத்துக்காகப் போராடும் பிரியா

கல்வியும்  ஓரளவு   அரசியலும்  இருக்கும்  நானும் மக்களுக்காக  இயங்கவில்லை  என்றால்  கல்வியையும் அரசியலையும்  நுகரமுடியாத  விளிம்புநிலை  மக்களை  எப்படி  எழுச்சிப் பெறச்  செய்வது?  ஆதலால்  இயங்குகிறேன்  என்கிறார்  பிரியா. 

போர்களுக்குப் பின்னால்... ஸ்திரீ பர்வம் நாடகம்

சர்வாதிகாரம் , பாசிசம், ஆணவம், வளங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்காக ஆட்சியாளர்களால் நடத்தப்படும் போர்கள் எந்தப் பாவமும் அறியாத சாமானியர்களின் உயிர்களைப் பறிக்கின்றன. எல்லாவற்றையும் அழித்துவிட்டு பிணங்களை ஆட்சி செய்யத் துடிக்கிறார்கள் சர்வாதிகாரிகள் என்பதை நாடகம் அழுத்தமாகக் கூறுகிறது.

அனிதாவுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?

அணிதா தன் குடும்பத்தின் உதவியில்லாமல் தனித்து வாழ்கிறார். அவருக்கு இருக்கும் பிடிப்பு இந்த வேலை மட்டும் தான். அதுவும் இல்லையென்றால் அனிதாவின் நிலை கஷ்டமாகிவிடும். ஒப்பந்த முறை தொழிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை உத்தரவாதமில்லாத போது திருநங்கைகளின் நிலை?

மாதவிடாய் உதிர ஓவியத்தில் விழிப்புணர்வு

மாதவிடாய் காலங்களில் வரும் ரத்தத்தை  ஏதாவது கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைப்பேன். வீட்டில்  இருக்கும் பெயிண்ட் பிரஷ் கொண்டு போஸ்ட் கார்டில் அல்லது கடினமான தாளில் ஓவியம் வரைவேன். வரைந்த ஓவியங்களை வெயிலில் காயவைத்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பேன். இது கிருமிகளிடமிருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டுமென்று  மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நான்  விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்துப் புரிதல் குறைவாக இருந்தது. ஆண்களையும் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களில் உள்ளடக்கும் நோக்கத்தில் சமூக வலைதளம் மூலமாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு  மாதவிடாய் உதிர ஓவியங்கள் வேண்டுமா  என்று கேட்டு  வரைந்து தருவேன். பெரும்பாலானோர் வாங்கினார்கள். ஒரு சிலர் மட்டுமே பயந்து ஓடினர்.

பெண்களின் உலகைத் திரையில் காட்சிப்படுத்த விரும்பினேன் - கண்ணகி திரைப்பட இயக்குநர் நேர்காணல்

எல்லா ஆண்களும் தன் தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கடந்து செல்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிக்கதைகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று உணர்வுகளும் வலிகளும் கனவுகளும் உள்ளன. ஆனால், சினிமாக்களில் அவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பிரதிபலிப்பதாகப் பெரும்பாலான காட்சிகள் இல்லை. கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பதில்லை.