சுருதி பேதங்கள்
சமீபத்தில் நடந்த ஓர் இளம் பெண்ணின் தற்கொலை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதே வேகத்தில் அமுங்கியும் போனது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் நாகர்கோவில் ஆணுக்கு மணமுடிக்கப்பட்டு ஆறே மாதங்களான நிலையில் தற்கொலை…

குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்?
பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும்.
சாதிக்குள், மதத்துக்குள், இனத்துக்குள்ளான ‘அரேஞ்ச்டு திருமணங்களை’ விட, அவர்களே தேடிக்கண்டடையும் லைஃப் பார்ட்னர் தான் அவர்களுக்குத் தேவை, சரியான தேர்வு.