UNLEASH THE UNTOLD

Tag: Brindha sethu

கோபத்தை வெல்வது எப்படி?

இயல்பில் மனிதர்கள் எல்லாருமே அன்பிற்கு ஏங்குபவர்கள்; அன்பானவர்கள். ஆனால், அவர்களுக்குத் தமது வாழ்வில் கிடைத்த மற்றும் கிடைக்காததன் ஏக்கம் கோபம் தன்னிரக்கம் ஏமாற்றம் வெறுப்பு எல்லாமே எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தனது வாழ்வை மற்றவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்.

கோபம் பிறரை மட்டுமல்ல, தன்னையும் அழிக்கும்...

கோபம் என்பது சிறு தீப்பொறி போல், தான் பற்றித் தொடங்கியவற்றிலிருந்து யாவருக்கும் தொற்றி எல்லோரையும் அழிக்க வல்லது மட்டுமல்ல, தன்னையே எரிக்கும் பெரும் தீ. அதைச் சுடராக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட நமது கைகளில்தாம் உள்ளது.

வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது...

‘வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது, நீங்கள் செய்வதை விரும்புவது மற்றும் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை விரும்புவது’ என்கிறார் மாயா ஏஞ்சலோ.

‘வாழ்க்கை என்பது கற்றுக்கொண்டே இருத்தல்!’

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.

சின்னச் சின்ன ரசனையில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...

நாம் தினமும் சாதாரணமாகக் குடிக்கும் காபிக்கும் 5 கி.மீ. நடந்து பரிசாக அடையும் காபிக்கும் ருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். அது அவ்வளவு மேம்பட்டு ருசிக்கும். தின வாழ்வை இப்படியான சின்னஞ்சிறிய விஷயங்களால், நாம் சுவாரசியப்படுத்திக்கொள்ளலாம்.

கடமையைச் செய்யாமல் ஒரு நாள்...

தன் நேசிப்பின் முழு முதல் படியை, ‘நமக்காக நேரம் ஒதுக்குதல்’ என்பதில் தொடங்குங்கள். அது அரை மணியோ ஒரு மணியோ உங்களுக்காக ஒதுக்குங்கள். அதில் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

எண்ணம் போல் வாழ்க்கை!

நம் எண்ணங்களை ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்போம். ஆனால், ‘எனக்கு இது போதும்’ என்போம். இரண்டிற்கும் இடையில்தான் எவ்வளவு முரண்பாடு. நாம் விரும்புவதற்கும் ஆசைப்படுவதற்கும் நேர்மாறாக நாமே நடந்து கொள்கிறோம்.

உங்கள் வீட்டில் பெரிய கண்ணாடி இருக்கிறதா?

முதலில் பிள்ளைகளின் பாத்ரூமில் அவர்கள் தன் உடம்பைப் பார்க்க, நேசிக்க, அறிய, உணர பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். அதைப் பற்றி எல்லாம் நம்மோடு பேசும்படியான, பகிரும்படியான நமக்கேயான பொழுதுகள் வேண்டும். அதனுள் வேறு யாருக்குமே அனுமதி கிடையாது.

எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?

மிக எளிதான வழி, அவர்களின் கேள்விகளுக்கு, அந்தந்தப் பருவத்திற்கேற்ற வகையில் எளிமையாகப் பதிலளிப்பதுதான். பிள்ளைகளின் கேள்விகளுக்கான எளிய பதில்கள் முக்கியம், நமது வயதின் கூடுதல் அறிதல்கள் காரணமாகப் பிள்ளைகளை நாம் வதைக்கக் கூடாது.