UNLEASH THE UNTOLD

Tag: anthropology

ஆரியம் vs திராவிடம்: இது இனப் போரா அல்லது கலாச்சாரப் போரா?

தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.

இனச்சார்பு தான் இனப்படுகொலைக்கான தொடக்கப் புள்ளி

இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை.

விதவை, மலடியின் எதிர்ச்சொல் என்ன?

பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை.

தமிழணங்கு: பண்பாட்டுக் கைப்பற்றலின் ஓர் உதாரணம்

பண்பாட்டுக் கைபற்றலை, அதற்கு நேர்மாறான பண்பாட்டுப் பாராட்டுதல் என்னும் பரஸ்பர பகிர்வு கொண்டு நாம் எதிர்கொள்ளலாம். பண்பாட்டுப் பாராட்டு என்பது நம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கலை மற்றும் பண்பாட்டை, உண்மையிலேயே மதித்துப் பாராட்டுவதாகும். இது ஒரு பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலானது. இந்தப் பரஸ்பர புரிதலுக்கு, மற்ற பண்பாட்டின் வரலாற்றைக் கொஞ்சமேனும் அறிய வேண்டியது அவசியமாகிறது. இது ஒருவரின் சொந்த அல்லது மற்றவர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது என்று மட்டும் அர்த்தமல்ல. இது நமது அனைவரின் வரலாற்றையும் சேர்த்துக் குறிக்கிறது.

வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி

மணமகள் செல்வம் தரும் பழக்கம் ஆப்பிரிக்க இனக்குழுக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கால் நடை சமூகங்கள் மத்தியிலும் பரிசம் போடுதல் என்ற பெயரில் காணப்படுகிறது.

உயிர், அதிகாரம்: நிலத்தின் இரு முகங்கள் 

ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த   சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள்