கேள்விசூழ் உலகில் வாழ்கிறோம்!
கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும்.
கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும்.
பணக்கார வீட்டுக்கு மருமகளாக வரும் ஏழைப் பெண்கள் எல்லோரும் இப்படித்தான் என்ற முத்திரையை நான் குத்தவில்லை; இப்படியும் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தைச் சொல்கிறேன்.
இனி வரும் காலங்களில் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா அத்தை, அண்ணன், தம்பி, அக்கா என உறவு முறைகள் எல்லாம் வழக்கொழிந்து போகும்.
முன் அறிவிப்பு இல்லாமல் எந்த சொந்தக்காரர்கள் வீட்டுக்காவது போனோம், அவ்வளவு தான். உலகத்தில் இருக்கும் சாபங்கள் அனைத்தும் விருந்தினருக்கே சமர்ப்பணம். அது யார் இந்த காலத்தில் வீட்டில் வந்து தங்கிப் போகும் விருந்தினர், என்று நீங்கள் கேட்கலாம். மாமியாரும், மாமனாரும் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெகு காலம் ஆயிற்று. மாமியார் மாமனாராகட்டும், மருமகளாகட்டும் இவர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி பலவருடங்கள் கடந்துவிட்டது. மாற்றத்துக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள் அந்த வீட்டுக்கு அடுத்த தடவை செல்லும் தகுதியை இழந்தவர்களாகி விடுகின்றனர்.