Karate Uniform wash – UKG
எப்பவும் பள்ளியில் தண்ணீர் குடிக்க மாட்டேன். 2 பெரிய பாட்டில் தண்ணீர் அப்படியே இருக்கும். பிருந்தா வந்து ‘தண்ணிய குடி, தண்ணி குடி’ என்று எப்போதும் சொல்லிட்டே இருப்பார். எனக்கு தண்ணீர் தாகம் இருக்காது. ஒரு நாள் கராத்தே க்ளாஸ் ஈவினிங்ல மழை.
க்ளாஸ் முடிஞ்சவுடனே, ஸ்கூட்டரில் போய்க்கொண்டு இருக்கும்போது, வழக்கம்போல ‘தண்ணி குடிச்சியா’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் வண்டியை நிறுத்தி,
‘நீ கீழ இறங்கு’ ‘…. …. ….. ’
‘இப்ப இறங்குறியா இல்லையா’ என்றார்.
நான் இறங்கிவிட்டேன்.
‘வீட்டிற்கு நடந்து தானாகவே நீ வா’ என்று சொல்லி வேகமாக ஸ்கூட்டரைக் கிளப்பினார்.
நான் பிருந்தா நிஜமாகவே என்னை ரோட்டில் விட்டுப் போய் விட்டார் என்று எண்ணி, ஸ்கூட்டரைப் பார்த்துக்கொண்டே வேகமாக ஓடிக்கொண்டு இருந்தேன். எதிர்பாராமல் சேற்றில் சறுக்கி கீழே விழுந்தேன். எனது கராத்தே யூனிஃபார்ம் முட்டியில் சேறாகிவிட்டது. பிருந்தா திரும்பவும் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு இன்னும் கோபம் வந்தது. ‘நீயே உன்னோட கராத்தே யூனிஃபார்மை துவைச்சிடு’ என்று சொல்லி வீட்டிற்குக் கூட்டிப்போனார். நானே துவைத்தேன்.
எக்ஸ்கலேட்டர்: இரண்டாம் வகுப்பு. 6 வயது.
எப்பொழுதும் பிருந்தா எஸ்கலேட்டரில் போக என்னோடு பக்கத்தில் இருப்பாங்க. திடீர்னு ‘நீயே எஸ்கலேட்டர் ஏறு, ஒன்னோட நான் வர மாட்டேன்’ என்று சொன்னாங்க. எனக்கு அந்த எஸ்கலேட்டர் பார்த்தாலே ரொம்ப வேகமாக ஓடுகிற ட்ரெயின் மாதிரி இருந்தது. அதுல எப்படி தனியே போறது,
‘பிருந்தா நீயும் வாயேன்’ என்றேன். ‘நான் குஞ்சு பிள்ளைதானே’
‘என்ன அதுக்கு? இப்ப போகலை என்றால் எப்ப போவே’ என்று கேட்டார். நான் பிருந்தாவையும் எஸ்கலேட்டரையும் பார்த்தபடி இருந்தேன். அங்கு நிறைய பேர் பார்த்துவிட்டு, நான் உதவி செய்கிறேன் என்றார்கள்.
ஆனால், பிருந்தா ‘இல்லை, பரவாயில்லை. அவங்களே வந்துவிடுவாங்க’ என்றார்.
கடைசியில் எவ்வளவு நேரம்தான் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பது, நான் ஏறுவோம் என்று ஏறிவிட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதே மாதிரி 10 வாட்டி ஏறி இறங்கச் சொன்னார் பிருந்தா. அப்ப யாரும் கூட இல்லை. இருட்டா ஆயிடுச்சு. நான் ஏறிட்டே இருந்தேன். கடைசியாக போதும் என்று சொன்னார் பிருந்தா. அதற்கப்புறம் எப்பொழுதுமே எஸ்கலேட்டரில் ஏறும்போது பயமே இல்லை.
ஸ்விம்மிங் பூல்:
அடுத்து அடுத்து நாள் எனக்கு swimming விட மேலே இருந்து தண்ணீரில் jump பண்ணுவது மிகவும் பிடித்திருந்தது. எல்லாமே பழக்கம்தானே.
எழுத படுத்தி எடுப்பது:
இதையெல்லாம் என்னை எழுதச் சொல்லி, என்னைப் படுத்தி எடுப்பது. முதலில் travel கட்டுரை மட்டும்தான். இதற்கப்புறம் எழுதக் கூடாது என்று நினைத்தேன். ஏன் என்றால், நினைப்பதை எழுதுவதற்கு மிக சிரமமாக இருந்தது. ஆனால், அதற்கப்புறம் நான் நிறைய எழுதிவிட்டேன். travel கட்டுரை, டம்போ படம் பற்றி, ஸ்பை நெக்ஸ்ட் டோர் படம் பற்றி, அம்மாவின் சேட்டைகள் பற்றி, லாக்டௌன் பற்றி….
இப்ப இருக்கிறதை வைத்து ‘எவ்வளவு நல்ல அம்மா – நல்ல பிள்ளை’ என்று எல்லாரும் எளிதாக சொல்றாங்க. இந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று இந்த வீட்டில் பிள்ளையாகப் பிறந்து பார்த்தால்தான் தெரியும்.
ஆசிரியர் குறிப்பு: ரித்திகா தோழர்…இந்த இடத்துக்கு நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்திருக்கீங்க. ஆனா பாதி வழியில நம்மால் முடியாதுன்னு உங்களை மாதிரி சில குட்டிப்பசங்களும், சிங்கிள் அம்மாக்களும் தயங்கி நின்னுட்டு இருக்காங்க. உங்க கட்டுரைகள் படிச்சு அவுங்களும் தைரியமா தண்ணிக்குள்ள குதிக்கட்டும்!
கட்டுரையாளர்:
ரித்திகா
ரித்திகா (18.06.2005) வயது பதினாறு, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினர். ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார்.
அருமை. தொடர்ந்து எழுதுங்க தோழர் ரித்திகா
Thanks Aunty
சுவாரசியமாக, எளிமையாக, உண்மையாக எழுதியிருக்கீங்க ரித்திகா தோழர் ! தொடர்ந்து எழுதுங்க. நிறைய அன்பும், வாழ்த்துகளும் !
தேங்ஸ் தோழர்
உங்களுக்கும் பிருந்தாவுக்கும் இடையில நடக்கிற உரையாடல்கள் interesting ஆக இருக்கு. எஸ்கலேட்டர்ல ஏறுறது, தண்ணில தொபுக்கடீர்னு குதிக்கிறது எல்லாமே பழக்கந்தான் இல்லையா? தொடர்ந்து எழுதுங்க