UNLEASH THE UNTOLD

வைதேகி பாலாஜி

தேவிகா அக்கா

வாஞ்சையான பேச்சுக்கும், அனுசரணைக்கும் நாங்கள் கட்டுண்டு விடுவோம். அவசர வேலையாக ஊருக்கு வருபவர்கள்கூட அக்கா வீட்டுக்கு வராமல் போகமாட்டார்கள்.

தண்ணீர் மேல் மிதக்கும் எண்ணெய்த் துளிகள்

பணக்கார வீட்டுக்கு மருமகளாக வரும் ஏழைப் பெண்கள் எல்லோரும் இப்படித்தான் என்ற முத்திரையை நான் குத்தவில்லை; இப்படியும் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தைச் சொல்கிறேன்.

ஒர்க் ஃப்ரம் ஹோமில் மட்டுமா சொந்தங்கள்?

அந்த உறவால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்ற நிலை வந்தாலும், படுக்கையில் கிடந்தவரைப் பராமரித்தார்கள். மனசாட்சியை மதித்தார்கள்; உணர்வுகளுக்கு கட்டுண்டார்கள். அது இல்லாதவர்கள் ஊருக்கு பயந்தாவது பெற்றவர்களைக் கவனித்தார்கள்.

பெரியம்மா

இனி வரும் காலங்களில் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா அத்தை, அண்ணன், தம்பி, அக்கா என உறவு முறைகள் எல்லாம் வழக்கொழிந்து போகும்.

விருந்தாளியா... ஐயோ!

முன் அறிவிப்பு இல்லாமல் எந்த சொந்தக்காரர்கள் வீட்டுக்காவது போனோம், அவ்வளவு தான். உலகத்தில் இருக்கும் சாபங்கள் அனைத்தும் விருந்தினருக்கே சமர்ப்பணம். அது யார் இந்த காலத்தில் வீட்டில் வந்து தங்கிப் போகும் விருந்தினர், என்று நீங்கள் கேட்கலாம். மாமியாரும், மாமனாரும் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெகு காலம் ஆயிற்று. மாமியார் மாமனாராகட்டும், மருமகளாகட்டும் இவர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி பலவருடங்கள் கடந்துவிட்டது. மாற்றத்துக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள் அந்த வீட்டுக்கு அடுத்த தடவை செல்லும் தகுதியை இழந்தவர்களாகி விடுகின்றனர்.