UNLEASH THE UNTOLD

ஸ்ரீதேவி மோகன்

பெண் என்பவள் பொருள் அல்ல, உயிர்

நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

த்ரில் (பெண்ணே நீ இயந்திரம் அல்ல)

ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அடிமைப்படுத்த கண்டுபிடித்த ஆயுதங்களிலே அதி அற்புதமானது தாய்மை என்பது தான்.

சுயம் (எனக்கே எனக்காக)

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லாவிஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?

சவுந்தரி

இளவயது மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டுப் போவதா துறவறம்? அதற்கு என்ன பெரிதாக தைரியம் வேண்டி இருக்கிறது?

வதம்

தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னைவிட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது எனும்போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சிதான் அவதூறு.