UNLEASH THE UNTOLD

நூலகம்

வேலூர்ப் புரட்சி 1806 - நூலறிமுகம்

இந்த வரலாறை, சாதி, மதம் தாண்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கிளர்ச்சிக் குரல்களை, நம் தலைமுறை வரை கொண்டு வந்து சேர்க்காததன் காரணமே இன்று இந்த அளவுக்கு அழுகிப்போயிருக்கும் சாதி, மத அழுக்கு மண்டியிருக்கும் சமூகத்தில் ஏகாதிபத்தியம் நம் குரல்வளைகளை நசுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதன் காரணமென நான் நினைக்கிறேன்.

த்ரில் (பெண்ணே நீ இயந்திரம் அல்ல)

ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அடிமைப்படுத்த கண்டுபிடித்த ஆயுதங்களிலே அதி அற்புதமானது தாய்மை என்பது தான்.

சுயம் (எனக்கே எனக்காக)

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லாவிஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?

சவுந்தரி

இளவயது மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டுப் போவதா துறவறம்? அதற்கு என்ன பெரிதாக தைரியம் வேண்டி இருக்கிறது?

வதம்

தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னைவிட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது எனும்போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சிதான் அவதூறு.

ஆண்ட்ரூஸ் விடுதி

ஓர் இயல்பான வாழ்க்கையோட்டத்தில் வரும் சராசரியான மனிதர்கள், ஆர்ப்பாட்டமில்லாத நிகழ்வுகள், அதைக் கற்பனை கலக்காமல் உள்ளதை உள்ளபடியே தந்த போதும் எப்படி இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது! வாழ்க்கை எத்தனை ஆச்சரியங்களைக் கொண்டது என்பதை வாழும்போது நாம் உணருவதைவிட, வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது நன்றாகப் புரியும் என்பதை அவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.

முதல் பெண்கள்

43 பெண்கள் பற்றிய கட்டுரைகளில், சில பெண்களின் பெயர்கள் அதிகமாக தெரிந்திருக்கிறது. சில பெண்களின் பெயர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். பல பெண்களைப் பற்றி இப்பொழுது தான் முதல் முறையாக கேள்விப்படுகிறோம். ஆனால் இந்த பெண்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தாங்கள் தேர்வு செய்த பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கிறார்கள்.