தீட்டு எனும் தீராப் பிணி
அக்கிரகார வாழ்க்கையில், மாதவிடாய் நேரத்தில் செய்வதற்கென்றே பெண்களுக்கு நிறைய வேலைகளை ஒதுக்கியிருந்தார்கள்!
அக்கிரகார வாழ்க்கையில், மாதவிடாய் நேரத்தில் செய்வதற்கென்றே பெண்களுக்கு நிறைய வேலைகளை ஒதுக்கியிருந்தார்கள்!
பரப்பான ஆண்களில் பெரும்பாலானோர் அடிப்படை சமையல் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்! குறைந்த பட்சம் காஃபி, தேநீர் தயாரிப்பது. சாதம் வடித்து, குழம்பு, ரசம் ஒரு பொரியலாவது செய்ய கற்றிருப்பார்கள்.
பெண்களுக்குத் திருமணமே, உபநயனக் கிரியை என்று சொல்லப்படுகிறது. பதிக்குச் செய்யும் பணிவிடையே குருகுலவாசம், வீட்டுவேலைகளைச் செய்வதே அக்னிஹோத்ரமாகும் என்கிறது மநு தர்மம்.
“பாவம்! அவ சின்ன வயசுலயே வீணாப்போயிட்டா!”
“அச்சச்சோ, அந்த மாமி வீணாப்போனவா, அவாளுக்கு போய் குங்குமம் கொடுக்கப் போறியே!”
“அவளப் பாரு, வீணாப்போனவ மாதிரியா இருக்கா?”
இருப்பதே மூன்று சதவிகிதத்தினர், இதிலே இவ்வளவு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கவழக்கங்கள் என இருக்கின்றன. இதில், பெருவாரியாக நான் நேரில் கண்டு உணர்ந்த உண்மைகளை மட்டுமே இந்த கட்டுரைத் தொகுப்பில் எழுதுகிறேன்.
பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.