UNLEASH THE UNTOLD

சக்தி மீனா

யாரிந்த நீசன்?

கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…

அகிலத்திரட்டு சொல்லும் சாதி

அய்யா வைகுண்டர், நாடார் (சாணார்) சமூகத்தை சத்திரிய சமூகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்ளவே இக்கதையை அகிலத்திரட்டில் சேர்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அய்யா வைகுண்டரின் இந்த நிலைப்பாட்டிலும் நான் முரண்படுகிறேன். வர்ணப்படிநிலையை முற்றிலும் அழிப்பதே ஏற்றத்தாழ்வை அழிக்கும் வழி! மாறாக, ‘நான் பிராமண வர்ணத்துக் காலுக்குக் கீழ்’ என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?

பரதேவதையும் பெயர் மாற்றமும்

மனிதனுக்குச் சாதி பார்த்து பெயர் சூட்டும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த பெருமையும் மனுநீதி சாஸ்திரத்தையேச் சாரும்.

பரதேவதையை மணமுடித்த முற்போக்காளர் முத்துக்குட்டி

சாதியக் கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, விவாகரத்தான பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்ட முற்போக்குவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர்.

திருச்செந்தூர்க் கோயில் நிர்வாகத்தை நம்பூரிகள் எப்போது கைப்பற்றினர்?

அகிலத்திரட்டு எழுதப்பட்ட, 1840ஆம் ஆண்டுக்கு பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து, அய்யா வைகுண்டர் இறந்த செய்தியும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளும் அகிலத்திரட்டு அம்மானையில் காணக்கிடைக்கின்றன

திருச்செந்தூர்க் கோயிலில் இன்றும் அடிமை முறை

தேவதாசி முறையின் எச்சம், அடிமை முறையின் எச்சம், அரச பரம்பரையினரின் புகழ் பாடும் பழக்கத்தின் எச்சம் போன்றவற்றை திருச்செந்தூர் முருகன் கோவில் பூசாரிகளும், பண்டாரங்களும் கட்டிக்காத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகனுக்கு உதயமார்த்தாண்டமும், உதயமுறைக் காரிகளும்

நம்பூதிரி பிரமணர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த கோயில்களில், நடைபெற்ற முறைகேடுகளையும், தேவதாசிப் பெண்களின் இழிநடத்தையையும், பூசாரி ஒருவனால் பெண்ணொருத்தி சீரழிக்கப்பட்ட சம்பவத்தையும் விளக்கிக் கூறி, ஆனதினால், காவடி, கைக்கூலி, காணிக்கை, தேவதாசி ஆட்டம் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்று கூறும் அகிலத்திரட்டும், அகிலத்திரட்டை அஸ்திவாரமாகக் கொண்ட அய்யாவழியும், இந்துத்துவத்தின் சித்தாந்தத்தோடு எப்படி பொருந்திப் போகும்?

கோயிலில் நடந்த இழிசெயல்

நாட்டு தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் பெருமைமிகு தொன்மம், அதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றொரு பெருங்குரல் சமீபத்தில் எழுந்துள்ளது. பார்ப்பனியத்தில் கலந்து விட்ட தமிழர்களின் தொன்மங்களை மீட்டெடுப்போம் என்று எழுச்சிமிகு குரலெழுப்புபவர்களிடம் சொல்ல நினைப்பது ஒன்றுதான்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல் - 2

கிறிஸ்தவ தோழிக்கு நாட்டு தெய்வங்களின் மீது வெறுப்போ அவநம்பிக்கையோ கிடையாது. நாட்டு தெய்வக்கோயில்களை கடந்து செல்லும்போது அவளும் சிலுவை போட்டுக் கொள்கிறாள். கோயில் கொடை விழாவின்  சமபந்தியில் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு ரசிக்கிறாள்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல்

‘சேயினுட ஆட்டு கேட்டு இருப்பது அல்லால்

பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்’8 என்ற வரிகளில் மக்கள் பேயாட்டம் பற்றி அறியாமல் வாழ்ந்தனர் என்று பெருமையாக உரைக்கிறது அகிலத்திரட்டு.