UNLEASH THE UNTOLD

நினைத்ததை எழுதுகிறேன்

உங்கள் அகக் குழந்தையைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் நன்றாக உங்கள் குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது தவறா அல்லது சரியா என்று அவர்கள் ஒரு துளிகூடக் கவலைப்படுவதில்லை. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களே உணர்கிறார்கள். அது போல நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் நாமே தட்டிக் கேட்க அனுமதிப்பதும், அவற்றைச் சரி செய்வதும் நம் உள் குழந்தையைப் பராமரிப்பதற்கான வழிகளில் ஒன்று.

வாழ்வதின் அர்த்தம் நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதில்தானே இருக்கிறது?

“நீங்கள் மனிதகுலத்தின் ஒரு சதவீத அதிர்ஷ்டசாலி பட்டியலில் இருந்தால், மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தைச் சேர்ந்த மனிதகுலத்தைப் பற்றிச் சிந்திக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார் உலகின் ஐந்தாவது பணக்காரரான வாரன் பஃபெட்.

மகிழ்ச்சி என்பது என்ன?

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன சொல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது இணக்கமாக இருந்தால் அதுவே மகிழ்ச்சி.’

தீராத தொற்று நோய்

என் மகன் என் அருகில் வந்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அம்மா, எழுந்திரு. எனக்குப் பசியாக இருக்கு. பாஸ்தா செஞ்சு கொடு” என்று எனக்கு உத்தரவிட்டுவிட்டு ஒரு பந்தை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட ஓடிவிட்டான்.

நான் செய்வதறியாது நின்றேன்.

‘லைக்’ செய்துதான் பாருங்களேன்!

என்னைப் பரவசப்படுத்தும் வகையில் எனது நெருங்கிய தோழியிடமிருந்து, ‘சூப்பர் டா, நச்சுன்னு இருக்கு கட்டுரை, தொடர்ந்து எழுது’ என்கிற கமெண்டுடன் என் பதிவிற்கு ஒரு லைக் இருந்தது!

ப்ராண்டுகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!