இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மாறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அமெரிக்க ராணுவமும் சிஐஏவும் அமெரிக்க அரசாங்கத்தின் பிற கிளைகளும் உலக மக்களுக்குச் செய்தவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் முடிவில், 40 வயதைக் கடந்த ஒவ்வோர் அமெரிக்கரும் சுமார் 25 வருட காலத்தை கம்யூனிச எதிர்ப்பு கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று அமெரிக்க எழுத்தாளரும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் விமர்சகருமான வில்லியம் ஹென்றியின் கருத்து கம்யூனிசத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்க மூலதனத்தின் செல்வம், சலுகைக்கு அச்சுறுத்தலைத் தவிர வேறு எந்தக் காரணமும் தேவையில்லை என்பதை அது எவ்வளவு அழுத்தமாக தொடர்ந்து இயங்கியுள்ளது என்பதையும் காட்டுகின்றது.

உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் கம்யூனிசத்தின் தீமையை எதிர்த்துப் போராடும் நேர்மையான அமெரிக்க சூப்பர்மேன்களை உருவாக்கும் தார்மீகத் தேவையின் இழிந்த பிரச்சாரப் பயிற்சியிலிருந்து பட்டம் பெற்ற அமெரிக்க நடுத்தர வயது கொள்கை வகுப்பாளர்கள், ராஜதந்திரிகள் உலகம் ’கம்யூனிஸ்டுகள்’ – ’கம்யூனிஸ்ட் விரோதிகள்’ ஆகிய இரண்டு ஜன்னல்கள் வழியாக மட்டுமே தனிநபர்கள், இயக்கங்கள், நாடுகள் அனைத்தையும் பார்த்தனர்.

சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சித்தாந்த, அரசியல், பொருளாதார காரணிகளின் சிக்கலான இடைவெளியால் உந்தப்பட்டன. இது பல ஆண்டுகளாக எச்சரிக்கையான ஒத்துழைப்புக்கும் அடிக்கடி கசப்பான வல்லரசான போட்டிக்கும் இடையே மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இரு நாடுகளின் அரசியல் அமைப்புகளில் உள்ள வித்தியாசமான வேறுபாடுகள், முக்கிய கொள்கை பிரச்னைகளில் பரஸ்பர புரிதலை அடைவதைத் தடுத்தன.

முதலாம் உலகப் போரிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றியதற்காக அமெரிக்க அரசு சோவியத் தலைவர்களுக்கு ஆரம்பத்தில் விரோதமாக இருந்தது. மேலும் கம்யூனிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசுக்கு எதிராக இருந்தது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சொந்தக்காரர்களைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானில்

கம்யூனிச ஆட்சி தோன்றக் கூடாது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். உள்ளக ரீதியான எதிர்ப்புப் போராட்டங்கள் இன்னும் வசதியாகப் போய்விட்டது.

அமெரிக்கா அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, அது பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதைத் தார்மீகமாகக் கருதியது. ஆப்கானிஸ்தானியர்கள் ஏன் கம்யூனிச ஆட்சியை எதிர்க்க வேண்டும்? கம்யூனிச ஆட்சி எல்லா இன, மத, மொழி பேசுகின்ற மக்களையும் சமமாக நோக்குவது. கல்வியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த இடத்தில் ஆப்கானிஸ்தானில் கிளம்பிய எதிர்ப்புகள் கம்யூனிசம் என்கின்ற கொள்கையை எதிர்த்தா, ஆட்சியின் ராணுவ அதிகாரம், வன்முறைகளை எதிர்த்தா?

இரண்டு விடயங்கள் இந்தக் கேள்விக்கான தெளிவைத் துல்லியமாகத் தரக்கூடியதாக உள்ளன.

முதலாவது, கம்யூனிசக் கொள்கையை மக்கள் விரும்பவில்லை என்பதற்கான வலுவான காரணங்களுக்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை. காரணம், கம்யூனிசம் பற்றிய தத்துவார்த்த விளக்கங்களோ விழிப்புணர்வோ அவ்வளவு பரவலாக ஆப்கானிஸ்தான் மக்களைச் சென்றடைந்திருக்கவில்லை. அதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருக்கவுமில்லை. ஒரு கம்யூனிச ஆட்சியை நிறுவுவதில் அக்கறை காட்டியளவு அரசியல் தலைவர்கள் யாரும் அந்த ஆட்சியை மக்களுடன் இணைப்பதற்கான செயற்பாடுகளில் கவனத்தைக் குவித்திருக்கவில்லை. ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான ஒரு மூலதனமாக மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசியலில் கம்யூனிசம் பயன்படுத்தப்படுகின்றது. சோவியத்திடமிருந்த ஆயுத பலத்தின் மீது ஆப்கானிஸ்தான் நாட்டு ஆட்சியாளர்களுக்கு இருந்த ஆர்வத்தைவிடவும் குறைந்த ஆர்வமே அவர்களுக்கு கம்யூனிசத்தில் இருந்தது.

இரண்டாவது, அரசாங்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கிய முஜாஹிதீன்களில்

இடதுசாரிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு ஆட்சியின் முறைமையில் இருந்த கோளாறின் மீதே வெறுப்பு இருந்தது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். அவர்களிடம் கம்யூனிச வெறுப்பு இல்லை.

அமெரிக்கா பாகிஸ்தான் உளவுதுறைக்கூடாக ஆயுத தளபாடங்களும் ஆள்சேர்ப்புக்கான உதவிகளும் பணமும் அளித்துத் தூண்டப்பட்ட முஜாஹிதீன்கள் (பிரிவுகளின் வகைகள் முன்னைய கட்டுரைகளில் பார்க்கப்பட்டன) அந்நிய சக்தியொன்றின் துணையிலான ஆட்சியில் மட்டும் வெறுப்புக்கொண்டவர்கள் இல்லை. அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் மீதும் வெறுப்புக் கொண்டவர்கள். இவர்கள் ’இஸ்லாமியரின் நாடு எனப்படுவது புனித இஸ்லாமிய ஆட்சி நிலவும் இடம்’ என்று கருதுகின்றவர்கள். இவர்களது அரசியல் கம்யூனிசத்தின் சித்தாந்தங்களுக்குத் தூரமானது. இது தீவிர இஸ்லாம் நம்பிக்கையாளர் சிலர் அல்லது ஒரு குழுவின் கொள்கை என்பதற்கும் இல்லை. அரபுலகின் ஆட்சி அதிகாரங்களையும் அரசியல் முறைமைகளையும் கவனித்தால் இது தெளிவுபடும்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய இயக்கம் தோன்றிய கதையானது இஸ்லாமிய உலகில் மற்ற இடங்களைப் போலவே நவீனமயமாக்கல் திட்டங்களுக்கான எதிர்வினையின் ஒரு கதை.

Black criminals wore a head yarn on a gray background.

மேற்கத்திய கொள்கை ஸ்தாபனத்தில் லேசான அக்கறை கொண்ட வல்லுநர்கள் ’நெருக்கடியின் புதிய வளைவு’ பற்றி எழுதத் தொடங்கினர். 1970 களில் Zbigniew Brzezinski என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தச் சொற்றொடர், முதலில் மத்திய கிழக்கில் சோவியத் விரிவாக்கத்தின் கற்பனையான சாத்தியத்தைக் குறிக்கிறது. உண்மையான ’நெருக்கடியின் வளைவு’ மிகவும் பரந்ததாக இருந்தது. ஆப்கானியப் போருக்குப் பிறகு இஸ்லாமியர்கள் சிதறி, ஜார்ஜியா, அப்காசியா, செச்சன்யா, தஜிகிஸ்தான், அல்ஜீரியா, எகிப்து மற்றும் போஸ்னியாவில்கூட துப்பாக்கியை எடுத்தனர். 1986ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் போர் உலகளாவிய ஜிஹாதின் தீவிரத்திற்கு மூன்று வழிகளில் ஊட்டமளித்தது.

முதலில், அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு சோவியத் விமான சக்தியைப் பெரிதும் முடக்கும் ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியது. இரண்டாவதாக, அமெரிக்கா, பிரிட்டனின் ராணுவ உளவுத்துறையும் (MI-6) , பாகிஸ்தானின் இன்டர்சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக ஆயுதப் படைகளை அனுப்ப ஒப்புதல் அளித்து, ’மென்மையான இஸ்லாமிய அடிவயிற்றில்’ ஊடுருவின.

மூன்றாவதாக, அமெரிக்க மத்திய புலனாய்வு மையம் (CIA) நேரடியாக ஐஎஸ்ஐ (ISI) யின் கூலிப்படையினரையும் உலகெங்கிலுமுள்ள மத ஊக்கமுள்ள தன்னார்வலர்களையும் ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தை ஆதரித்தது. 1988 வாக்கில், நியூயார்க், டெட்ராய்ட், சான் பிரான்சிஸ்கோ உட்பட பல அமெரிக்க நகரங்களில் ஆட்சேர்ப்பு மையங்கள் இருந்தன.

இந்தத் தொடர்பாடல் கம்யூனிச எதிர்ப்பு புனித போர்வீரர்களின் மாநில ஹெராயின் நுகர்வும் விற்பனையையும் அமெரிக்க ஆதரவுடன் அதிகரித்தது. 1980களின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனை ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்கள் உயர்கிறது.

போதைப் பொருள் பாவனையில் அதிகப்படியான இறப்பு 1979 -1983 ஆம் ஆண்டுகளுக்குமிடையில் 93% அதிகரித்தது. இஸ்லாமிய நாகரிகமும் மேற்கத்திய நாகரிகமும் ஒருவருக்கொருவர் பொருந்தாதவை, முரண்பாடானவை என்பதை முடிவு காண்பதற்குள் இரண்டும் அச்சுறுத்தலான அனுமானங்களை நோக்கி நகர்கின்றன.

உலகம் திரும்பும் புள்ளியில்லாமல் அதன் விதியின் உச்சத்தை அடைந்துவிட்டது என்று கூறவில்லை. அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய உலகிற்குமிடையிலான பொதுவான மதிப்புகள், குறிக்கோள்கள் தீவிரவாதத்தின் பின்னணியில் முக்கியமான காரணிகள். இதற்கிடையில், தேவைப்படுபவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களுக்கும் அதிகார வர்க்கங்களுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. வரலாறு முழுவதும் பணக்காரர்கள், சக்திவாய்ந்த பிரிவுகள் அமைதி, நீதி, மதம், சுதந்திரம் என்ற பெயர்களில் போர்களைக் கையாண்டு வருகின்றன.

தொடரும்…

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.