UNLEASH THE UNTOLD

Month: May 2024

அர்த்தமுள்ளதா இந்த மதங்கள்?

பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான்.

லட்சியத்தை அடையும் வழிமுறைகள்

நாம் யாரும் இயந்திரமல்ல, நிச்சயம் இதிலிருந்து அவ்வப்போது விலகுவோம். ஆனாலும் பாதைத் தெளிவாக இருந்தால்தான், விலகுகிறோம் என்பதே புரியும். இல்லாவிடில் வெகுதூரம் வந்த பின்தான் பாதை மாறியதே தெரியும். சரி செய்ய நீண்ட காலம் பிடிக்கலாம் அல்லது சரி செய்ய முடியாமலே போகலாம்.

9. குடும்ப நாவலாசிரியர்கள் Vs இலக்கியவாதிகள்  

வீட்டுப் பெண்களின் நேரம் என்பது அவர்களுக்கானது இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டும்.  இதற்கிடையில் டீ இடைவேளை, ஒவ்வொரு வேளை சமையலுக்கான பாத்திரங்களைக் கழுவி வைப்பது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது, துணிகளைக் காய வைத்து மடித்து வைப்பது என்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஏதாவதொரு வேலை வந்து கொண்டே இருக்கும்.