UNLEASH THE UNTOLD

Year: 2023

புத்தம் புதிய வெளிச்சம்!

குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைப் பருவம்தான் நாம் குழந்தைகளுக்கு தரும் உண்மையான சொத்து.
ஏதோ ஒரு தலைமுறையில் யாரோ தொடங்கிய தவறுகளை தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. தீமைகளைத் தடுக்க சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். மலை தடுக்கிறது எனப் பயந்து நிற்க வேண்டாம், துணிந்து ஒவ்வோர் அடியாக எடுத்து நடக்க தொடங்கினால் போதும் மலையையும் எளிதாகக் கடந்துவிடலாம்.

பூமி சமநிலை தவறிவிடுமா?

ஆண்கள் கோயிலில் நடக்கும் கூட்டத்துக்குச் செல்வது போன்று பெரிய முடிவுகளை எடுப்பார்கள். கோயிலில் சாமி கும்பிட நிற்கும் போது பெண்கள் எப்போதும் இடது பக்கத்தில் நிறுத்தப்படுவர். ஆண்கள் வலது பக்கத்தில் நிறுத்தபடுவர். பூசாரிகள் பிரசாதம் கொடுக்கும் போது முதலில் கொடுப்பது ஆண்களுக்குத்தான். அது மட்டுமின்றி ஏன் எப்போதும் பெண்கள் இடது பக்கத்தில் நிற்க வேண்டும்? வலது பக்கம் நின்றால் பூமி சம நிலை தவறி விடுமா?

மருதன் பெருவிருந்து

மரப்பட்டையின் சுகந்தம் தலைமுடியின் வேர்கள் வழியே அவளுக்கு மணந்தது. கண்விழித்துத் தலையை நிமிர்த்தினாள். கதவிடுக்கின் வழியே வீட்டின் உள்ளிருந்து மருதன் கசிந்திருந்தான்.

ஜொலிக்கும் முகங்கள் - ஜோ, திரிஷா

லைம்லைட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு திருமணமானதும் துறைரீதியாக வாய்ப்புகள் இல்லை, காதல் கிசுகிசுக்களில் சிக்கினால் வாய்ப்புகள் குறையும் எனவும் நம்பக்கூடிய பொய்களாக மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட பெண்கள்!

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க புதிய பயிர்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. நமது மூதாதையர்கள் காட்டுச் செடிகளிலிருந்து பயிர்களாக மாற்றிய உணவுகளைத்தாம் நாம் இன்னமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நமது தற்கால உணவு ஒருவகையில் பண்டைய விவசாயிகளால் வடிவமைக்கப்பட்டது” என்கிறார் மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி. இவர் குறிப்பிடும் பண்டைய விவசாயிகள் பெண்கள்தாம் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.

ஆணாதிக்க வேர் பிடித்த பெண் சமூகம்

பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.

நாற்பதுக்குப் பின்...

கணவர், குழந்தைகள்தான் வாழ்க்கை தனக்கென ஒரு வாழ்க்கை இல்லை என்பதான மாய வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தன் இளமைப் பருவம் முழுவதையும் குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும்தான் பெரும்பாலோனர் செலவிடுகின்றனர். குடும்பம் தாண்டி வேறு ஒன்றைச் சிந்திக்க முடியாத நிலை தானாக வாய்க்கப்பெற்றுவிடும். ஏனென்றால் நம் குடும்ப அமைப்பு பெண்களை அப்படியாகத்தான் வார்த்து எடுக்கிறது.

நைட்டியும் கைலியும் - ஃபேஸ்புக் வன்மகுடோன்கள்

‘நைட்டி போட்டா உள்ள இருக்கறது எல்லாம் தெரியுது’ன்னு சமுத்திரக்கனி ரேஞ்சுக்கு பீல் பண்ணுதுங்க. எப்படி பெண்கள் பாவாடைக்குள்ள உங்களோட கட்டுப்பாடு வந்துச்சு?

Yashoda weds Rithik

“அவனுக்கு அல்சர் இருந்ததே தெரியாது. எதையுமே சொல்ல மாட்டான். ஒரு தலைவலி காய்ச்சல்னு படுத்ததில்லை. எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான். சமையலுக்கு, தோட்ட வேலைக்கு எல்லாத்துக்கும் ஆள் இருந்தாலும் அவனே இழுத்துப் போட்டு எல்லா வேலையும் செய்வான். குறிப்பா என்னை அப்படிப் பார்த்துப்பான். அவன் இல்லாம எப்படி இருக்கப் போறேன்னே தெரியல…”

குடும்பக் கட்டுப்பாடு

மாத்திரை, ஊசி, சாதனம், அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான சிகிச்சை முறைகளும் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளன. மாத்திரை, ஊசி, சாதனம் போன்றவை தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் எனவும், அறுவை சிகிச்சை என்பது நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.