UNLEASH THE UNTOLD

Month: June 2023

குர்தியும் பட்டியாலா பேண்ட்டும்

“சம்சாரி வீட்டில் வாக்கப்பட்டு மாடு, கண்ணு, காடு, கரைன்னு போறவளுக்குச் சீலதாண்டி அழகு. ஏழு வயசுல பேரன் இருக்காங்கறத மறந்துட்டு நைட்டி போடுறேன்னு கேக்குறயே? உனக்கு எம்புட்டு தைரியம்? அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க எல்லாம் பார்த்துச் சிரிக்கமாட்டாங்க? கோமாளி மாதிரி நைட்டிய மாட்டிகிட்டுத் திரியணும்னு கிறுக்குத்தனமா ஆசைப்படாதே’’ என நைட்டி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

‘ஓப்பன் டே’க்கு வருவாளா நிலா?

அம்மாக்கள் அனைவரும் வேலையில் இருக்க, அப்பாக்களின் தகவல்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் பொறியியல், முதுகலைப் பட்டங்கள் முடித்திருந்தார்கள். அறிவியல், கணிதம், தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தார்கள். ஆனால், வேலை என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் பெரும்பாலும் ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ என்று இருந்தது.

இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சிருக்கு...

இந்திய ஆண்களின் விருப்பத்திற்குத் தானே இன்றும் வீடுகளில் சமையல் செய்யப்படுகிறது. எத்தனை வீடுகளில் பெண்கள் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் பெண்கள் முதலில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? அப்படிப் பெண்கள் முதலில் சாப்பிடுவது பெருங்குற்றம் என்றுதானே அவளது மரபணுக்களில் போதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மனைவி அல்லது தாய் பரிமாறினால் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் குலத் திலகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தனக்குப் பின்னால் சாப்பிடுபவளுக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டு, ஏப்பம் விடும் ஆண்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உரிமை இருக்கும் போது சமைக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.