19.04.21.

என் நலம்விரும்பி ஒருவர் ” அனு நீ ஒரு அரசு ஊழியர். நல்லா வேலை பார்க்க கூடிய மருத்துவர் என்ற பெயரும் உனக்கு அதிகாரிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கு. நீ ஏன் உன் பெயரை கெடுத்துக் கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறாய்”, என்றார்.

என்ன காரியங்களில் அவ்வாறு ஈடுபட்டேன் என்றேன்.

“ஏன் சாதியப் பிரச்சனைகளை முகநூலில் பதிவிடுகிறாய், அது தேவையற்ற தலைவலியை உனக்கு ஏற்படுத்தும். உன் பதிவுகளை பிடிக்காதவன், மாற்று சாதியினர் உன்னிடம் பிரச்சினை பண்ண வாய்ப்பிருக்கு. அதனால் முகநூலில் கொஞ்சம் அடக்கி வாசி”, என்றார்.

“அடக்கி வாசிக்க நான் வீணையல்ல. நான் பறை. முகநூலில் சாதிய பிரச்சனைகளைப் பேசாமல் நான் சாம்பார் வச்சதை பேசணுமா? மீன் குழம்பு வைப்பது எப்படி என சமையல் குறிப்புகள் மட்டுமே நான் பேசணுமா? நான் சாதியத்தை ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டவள், இந்த அரசுப் பணி பற்றிய கவலை எல்லாம் எனக்கில்லை”, என்றேன்.

நீ பாகிஸ்தான்காரனைக் கண்டால் விரோதம் கொள்வாய்.
நான் நேசிப்பேன்.
நீ ஆப்பிரிக்கர்களைக் கண்டால் அலட்சியமாகப் பார்ப்பாய்.
நான் உறவு கொண்டாடுவேன்.
நீ முஸ்லீம்களை தீவிரவாதி என்பாய்.
நான் நட்புடன் பழகுவேன்.
நீ கிறிஸ்தவர்களை அயோக்கியன் என்பாய்.
நான் அன்பு காட்டுவேன்.
நீ இந்து என்று சொல்லிக்கொண்டே இந்துக்களையும் உன் சாதியச்சாக்கடையால் பிரிப்பாய்.
நான் சாதியத்தை கடந்து நேசம் கொள்வேன்.

எனக்குத் தேவை மனிதம் மட்டுமே. இவ்வுலகு அனைவருக்கும் பொதுவானது. அது பொதுவில் நடத்தப்பட என்னால் இயன்றதைச் செய்வேன்.
அரசுப் பணிக்கு வந்ததே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தான். அவர்கள் பக்கம் நின்று பேச அரசுப் பணி அனுமதிக்காது எனில் அரசுப்பணி துறப்பேன். வெளியே சென்றால் அரசுப்பணியில் சம்பாதிப்பதை விட அதிகம் பொருள் ஈட்ட முடியும்.

  • மருத்துவர் அனுரத்னா