தினமும் என்னைக் கவனி...
நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.