UNLEASH THE UNTOLD

Tag: tribals

டோங்கிரியா வன தேவதைகள்!

டோங்ரியா பழங்குடி பெண்கள் வேதாந்தாவுக்கு எதிராக உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சாலைத் தடைகளை நடத்தினர். எக்காரணத்திற்கும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தங்கள் வனங்களைக் காக்க ஊக்கப்படுத்தியுள்ளது.

வேட்டையாடும் ‘ஆகா’ பெண்கள்!

ஒன்பது மாத கர்ப்பிணியான ஆகா பெண்கள் மரம் ஏறி வேட்டையாடுகிறார்கள். குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். சில தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு விலங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேட்டையாடுகிறார்கள். பெண்கள் வேட்டையாடலி நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பரிணாம, கலாச்சாரக் கோட்பாட்டு நோக்குநிலைகளால் கணிக்கப்படும் பெண் வேட்டைக்கான சூழல்களில் பெரும்பாலானவை ஆகாவின் இந்தக் குழுவில் நிகழ்ந்தன.

பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறை விளைவுகள் தருமா?

ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.