தமிழணங்கு: பண்பாட்டுக் கைப்பற்றலின் ஓர் உதாரணம்
பண்பாட்டுக் கைபற்றலை, அதற்கு நேர்மாறான பண்பாட்டுப் பாராட்டுதல் என்னும் பரஸ்பர பகிர்வு கொண்டு நாம் எதிர்கொள்ளலாம். பண்பாட்டுப் பாராட்டு என்பது நம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கலை மற்றும் பண்பாட்டை, உண்மையிலேயே மதித்துப் பாராட்டுவதாகும். இது ஒரு பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலானது. இந்தப் பரஸ்பர புரிதலுக்கு, மற்ற பண்பாட்டின் வரலாற்றைக் கொஞ்சமேனும் அறிய வேண்டியது அவசியமாகிறது. இது ஒருவரின் சொந்த அல்லது மற்றவர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது என்று மட்டும் அர்த்தமல்ல. இது நமது அனைவரின் வரலாற்றையும் சேர்த்துக் குறிக்கிறது.