ஆரியம் vs திராவிடம்: இது இனப் போரா அல்லது கலாச்சாரப் போரா?
தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.